Friday, January 18, 2013

தங்கமே தங்கம்! ஹால்மார்க் முத்திரையின் முகத்திரை.

 


தங்கத்தின் விலை தறிகெட்டுப் பறக்குது. தங்கம் என்ற பெயரை, தாளில் எழுதி வைத்துத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை, தங்கமென்று வாங்க நினைக்கும் காலம் மாறி, தங்கமென்று பெண் பிள்ளைகளுக்கு பெயர்சூட்டி மட்டுமே மகிழவேண்டும் போல! சராசரி இந்திய்க் குடும்பங்கள் நிலையென்ன?பரிதாபம்தான்.


தங்கத்தில் செய்யப்படும் கலப்படம்தான் இப்போதைய ஹாட் சப்ஜக்ட். அதான், சுத்தத் தங்கத்தை திடப்படுத்த, செம்பு போன்ற உலோகங்கள் கலப்பாங்களே, அது எங்களுக்குத் தெரியாதான்னு கேட்டீங்கன்னா, இப்ப சொல்லப்போற விஷயத்தை படிச்சிட்டு சொல்லுங்க பார்ப்போம்!


கேரளாவே இந்த விஷயத்திலும் விழித்துக்கொண்டது முதலில். கொச்சியை சேர்ந்த சங்கரமேனன் என்பவர், கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிய இ-மெயில் ஒன்றை தாமாகவே முன் வந்து வழ்க்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், “தங்க நகைகளில், ருதேனியம், இரிடியம் போன்ற அளவுக்கதிகமாக சேர்க்கப்படுவதாகவும், அதில் அடங்கியுள்ள பொருட்கள், புற்று நோய்கள் உள்ளிட்ட நோய்கள் உருவாக காரணமாகிறதெனவும், சில சான்றுகள் சமர்பிக்கப்பட்டிருப்பதால், தங்க நகைகளின் தரம் நிர்ணயம் செய்யும், ‘பியூரோ ஆஃப் இண்டியன் ஸ்டாண்டர்ட்ஸ்’ (BIS) நிறுவனத்தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, நீதியரசர்கள் பர்க்கத் அலி, பஷீர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


 


அதனைத்தொடர்ந்து, விஞ்ஞானி உண்ணி கிருஷ்ணன், உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகி, தங்க நகை தயாரிப்பில் ப்யன்படுத்தப்படும் உலோகக்கலவை, அதில் கலக்கப்படும் மூலப்பொருட்கள் மற்றும் அதில் தவிர்க்க வேண்டிய பொருட்கள் குறித்து அரசு சில சட்ட திட்டங்கள் வகுத்து அதன் மூலம் தங்க நகை தயாரிப்பில் சில கட்டுபாடுகள் கொண்டு வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்து அவர் சொன்ன செய்திதான், தங்க நகை பிரியர்களை தலை கிறு கிறுக்க வைத்துள்ளது.

“நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில்தான், ஹால்மார்க் முத்திரையைப் பதிக்கிறார்களே தவிர அது எங்களது துறைக்கு கட்டுப்பட்டது அல்ல” என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார். ஆனால், நகைக்கடை உரிமையாளர் ஒருவரோ, ஹால்மார்க் தங்க நகைகளில்,அப்படிக் கலப்படம் சாத்தியமில்லை எனவும்,ஹால்மார்க் தங்கநகைகள், அரசுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம், ஆய்வு செய்யப்படுவதாகவும், அவற்றில் ருதேனியமோ, இரிடியமோ கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அந்த நகைக்கடை மற்றும் ஹால்மார்க் மையத்தின் உரிமம் ரத்து செய்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.



இப்பத்தான் கம்யூட்டரெல்லாம் வைச்சு, தங்கத்தின் தரத்தை நாமே கண்டுபிடிச்சுக்கலாம்னு, கடை கடையா விளம்பரம் செய்றாங்களேன்னு கேட்கலாம். இந்தக் கலப்படம், கண்டுபிடிப்பது கடினம். இரிடியம் மற்றும் ருதேனியம் போன்றவற்றை சுத்தத் தங்கத்தில் கலப்படம் செய்யும்போது, அவை தங்கதின் ஓர் அங்கமாக மாறிவிடுகிறது. செம்பைப்போல் இவற்றைப் பிரித்தறிய இயலாது. செம்பு சேர்த்தவுடன் தங்கத்தின் திடத்தன்மை அதிகரிக்கும். அது வேண்டாமென்றால், தங்கத்தை உருக்கி புடம் போட்டால், செம்பு பிரிந்துவிடும். ஆனால், நாம பேசுற இரிடியமும், ருதேனியமும் தங்கத்தில் ஒரு அங்கமாகி, தனியே பிரித்தறிய முடியாமல் செய்து, தங்கத்தின் தரத்தைக் குறைக்கின்றது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், மருத்துவர்கள் சிலரோ, இரிடியம், ருதேனியம் கலந்துள்ள தங்க நகைகள் அணிவதால், உடல் நலம் பாதிக்கும் என்கிறனர். மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் திரு,கே.வி.தாமஸ், தாம் கலந்து கொண்ட விழா ஒன்றில், இரிடியம் போன்ற உடலிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மூலப்பொருட்கள் தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதெனக் கூறியுள்ளார்.

------------------------------------------------------------------------

”எப்படியோ போங்கப்பா, தங்கம் விலை எப்ப இறங்குமப்பா?” என்கிறீர்களா?
டிஸ்கி: அண்மையில், குமுதம் ரிப்போர்டரில் நான் படித்த, ‘தங்கம் அணிந்தால் கேன்சர்’ என்ற கட்டுரை எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பினால் விளைந்த 

------------------------------------------------
பகிர்வு. நன்றி:குமுதம் ரிப்போர்டர்.
அன்புடன்,
காந்திமதிசங்கரலிங்கம்.

--------------------------------------------------

நன்றி http://unavuulagam.blogspot.com/2011/09/blog-post_19.html

No comments:

Post a Comment