Tuesday, December 4, 2012

பெண்கள் வீட்டை விட்டு ஓடும் செயல்களுக்கு செல்போனே காரணம்: கிராம பஞ்சாயத்தில் அதிரடி முடிவு


                                                 


இந்திய பீகார் மாநிலம், கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுந்தர்பாடி கிராம பஞ்சாயத்தில், பெண்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து உறுப்பினர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
இந்த உத்தவை மீறி செல்போன்கள் பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது. பெண்கள் சாலையோரம் நின்று குளிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், திருமணமான பெண்கள் வீட்டுக்கு வெளியில் செல்போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்க கிராம பஞ்சாயத்தில் முடிவு செய்திருப்பதாக மாவட்ட அதிகாரி ஒருவர் கூறினார். 
சமூகத்தில் நடக்கும் அனைத்து தீமைகளுக்கும், குறிப்பாக காதல் விவகாரங்கள் அதிகரித்து, வீட்டை விட்டு ஓடும் செயல்களுக்கு செல்போன்கள்தான் காரணம். எனவே, பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த உத்தரவை பிறப்பிக்க அனைத்து மூத்த உறுப்பினர்களும், கிராமவாசிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று அக்கூட்டத்தை வழிநடத்திய முகமது மன்சூர் ஆலம் குறிப்பிட்டார். இவ்வாறு பெண்களுக்கு செல்போன் பயன்படுத்த கிராம பஞ்சாயத்தில் தடைவிதித்திருப்பது பீகாரில் இது முதல் முறையாகும் என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
பீகாரில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களில் சுமார் 60 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  

read more::::::::::::::::::::::::நக்கீரன்:::::::::::::::

No comments:

Post a Comment