Wednesday, November 21, 2012

கவிதை : வரவேற்பறைக் காட்சிகள்




வரவேற்பறையிலேயே
வைக்கப்படுகிறது
காட்சிப் பொருட்கள்
நிறைந்து வழியும்
கண்ணாடி அலமாரி.
சொல்லாமல் சொல்லும்
பெருமைப் பதக்கங்களும்,
பரிசாய்க் கிடைத்த
பஞ்சுப் பொம்மைகளும்,
வியக்க வைக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுமாய்.
கவனமாய் அடுக்கப்பட்டிருக்கும்
அதற்குள்
எப்போதும்
இடம்பெறுவதில்லை
தோல்விகளின் சின்னங்களோ,
அவமானங்களின் அறிவிப்புகளோ.
இடப்பற்றாக்குறை
நெருக்கியடிக்கையில்
இடம் பெயரும் பொருட்கள்
தொலைக்காட்சிக்கு மேலும்
இடம் பிடிப்பதுண்டு.
எங்கும் இட ஒதுக்கீடு
கிடைக்காதவை
படுக்கையறை பரணில்
பெட்டிகளுக்குள் பத்திரமாய்.
வரும் குழந்தைகள்
விளையாடக் கேட்பினும்
மூச்சு முட்ட
மூடிக் கிடப்பவை மட்டும்
திறக்கப் படுவதேயில்லை.
உள்ளிருந்து
ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்
பொம்மைகள்
இயலாமையின் உச்சத்தில்

::::::::::::நன்றி சேவி அண்ணா::::::::::::

No comments:

Post a Comment