Wednesday, November 21, 2012

தமிழ் நாடு திருவள்ளூர் அருகே அதிசயம்: 2 தலையுடன் கன்று ஈன்ற எருமை மாடு

திருவள்ளூர் அருகே அதிசயம்: 2 தலையுடன் கன்று ஈன்ற எருமை மாடு

தமிழ் நாடு ,திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பெரியதெருவை சேர்ந்தவர் பழனி. பால் வியாபாரி. இவர், தனது வீட்டில் ஏராளமான பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு எருமை மாட்டை பழனி, விலைக்கு வாங்கினார். இந்த எருமை மாடு கருவுற்று இருந்தது.

இது நேற்று(நவம்பர் 21, 2012) ஒரு கிடா கன்றை ஈன்றெடுத்தது. ஆனால் அந்த எருமை கன்று வழக்கத்துக்கு மாறாக 2 தலையுடன் வித்தியாசமாக காணப்படுகிறது. தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அந்த அதிசய எருமை கன்று தனது 2 வாயாலும் தாய் எருமையிடம் பால் குடிக்கிறது.

2 தலையுடன் எருமை கன்று பிறந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனால் அக்கம் பக்கம் கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், கூட்டம் கூட்டமாக வந்து இந்த அதிசய எருமை கன்றை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

::::::::::::::::::::::::::::::::மாலைமலர்:::::::::::::::::::::::::::::::::::::::::::

No comments:

Post a Comment