Monday, December 3, 2012

புதன் கிரகத்தில் ஐஸ் படிவத்தில் தண்ணீர்: நாசா கண்டு பிடித்தது


[optional image description]
Ice, ice, baby! This 68-mile-diameter indented crater, located in the north polar region of Mercury, has been shown to harbor water ice. (AP Photo/NASA/Johns Hopkins University Applied Physics Laboratory/Carnegie Institution of Washington)

புதன் கிரகத்தில் ஐஸ் படிவத்தில் தண்ணீர் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.
 
சூரிய குடும்பத்தில் புதன் முதலாவது கிரகமாக உள்ளது. எனவே இது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. இருந்தாலும், இங்கு தண்ணீர் ஐஸ் படிவங்களாக அதிக அளவில் உள்ளது.
 
இங்கு 10 ஆயிரம் கோடி டன் முதல் 1 லட்சம் கோடி டன் வரை ஐஸ் கட்டிகள் படிவங்களாக உள்ளன. இது வாஷிங்டன் அளவில் 1 1/2 மைல் ஆழத்துக்கு புதைந்து கிடப்பதாக தெரிகிறது.
 
இதை அமெரிக்காவின் நாசா மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா விண்வெளிக்கு அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள போட்டோ மூலம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானி சீன் சி சாலமன் தெரிவித்துள்ளனர்.
 
இதன் மூலம், அங்கு தண்ணீர் ஐஸ் படிவங்கள் வடிவத்தில் உறைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. புதன் கிரகத்தின் துருவங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருந்தும் அங்கு தண்ணீர் ஐஸ் படிவங்களாக உறைந்து கிடப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே, இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment