Friday, November 23, 2012

வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்


வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்


கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம் மற்றும்அம்பர்உறுதிசெய்கின்றன

கறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நு
ட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும்.


கரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.

அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன் கரியமில வாயு வெப்பம் நீராவி ஆகியன அடிப்பரப்புக் குழாய் வழியாக புற்றின் வெளிக்காற்றுடன் வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று மீண்டும் புற்றுக்குள் உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று புற்றினுள் சென்று புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.இக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால் புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது.

கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல் கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 500000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;


பெயர்வேலைகுறிப்பு
1.இராணிக்கறையான்கறையான்களை வழிநடத்துதல்குட்டி போடுதல்
2.ஆண்கறையான்இனக்கலவி புரிதல்எந்த வேலையும் செய்யாது
3.வாகைக்கறையான்பாதுகாப்புப் பணிகுருடு; மலடு; ஆண், பெண் உண்டு;
1-2ஆண்டு வாழும்.
4.பணிக்கறையான்உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல்குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும்

மழைக்காலத்தில் வயது முதிர்ந்த கறையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே அவை இறக்கை முளைத்து ஈசல்களாக வெளியில் வந்து கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து ஒரே நாளில் உயிரை விட்டுவிடும். அதனால் கறையான்களின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படுகிறது.

இராணிக்கறையான்

ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். புற்றின் ஆரம்ப காலத்தில் இராணி இடத்தை தேர்ந்தெடுத்து சிறுகுழிப் பறித்து முட்டைகள் இடும். இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும்.
ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும்.முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்

ஆண்கறையான்கள்
சில சிற்றினங்களில் மட்டுமே ஆண் கறையான் இறந்தாலும் மற்றொரு ஆண் கறையான் இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம்செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால் அவை இறந்து விடும்.

1976ஆம் ஆண்டு இடான்சானியா நாட்டின் 5 மீட்டர்களுள்ள கறையான் புற்றின் நிழற்படம்

வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கரையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பி்னை உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.

வாகைக்கறையான்
பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும்.இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.
துப்பிக்கறையான் - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.

பணிக்கரையான்கள்
தங்கள் உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்

கறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது.தாவரங்களிலுள்ள செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி கரையான்களுக்கு இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்.

thanks:::::sivatharisan paranirupasingam,karaitivu::::::::::::::::::

No comments:

Post a Comment