Wednesday, September 12, 2012

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்


Microsoft Unveils a New Logo for First Time in 25 Years
கம்ப்யூட்டர் யுகத்தில் பெரிய சாம்ராஜ்ஜியம் நிகழ்த்தி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 25 ஆண்டுகளுக்கு பிறகு  தனது லோகோவை முதல் முறையாக மாற்றி வடிவமைத்துள்ளது.
சமீபத்தில் தனது புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், லோகோவின் வடிவமைப்பையும் மாற்றியிருக்கிறது.
25 ஆண்டுக்கு பிறகு நிறுவனத்தின் லோகோ வடிவமைப்பினை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பித்து கொஞ்ச காலங்களிலேயே, எதையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்கு வேண்டி நிறைய மாற்றங்களை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதுவரை சிறந்த தொழில் நுட்பங்களை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது.
25 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவினை மாற்றி வடிவமைத்தது மட்டுமல்லாமல், மாற்றத்தினை மேற்கொள்ள இது சரியான நேரம் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெஃப் ஹேன்சன் கூறியிருக்கிறார்.
ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற இயங்குதளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் உலகம் இப்போது விண்டோஸ்-8 இயங்குதளத்திற்காக வெகுவாக காத்திருக்கிறது.
விண்டோஸ்-8 இயங்குதளத்தின் முக்கியத்துவமே, இந்த புதிய இயங்குதளம் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்திலும் பயன்படுத்த முடியும் என்பது தான்.
புதிய எலக்ட்ரானிக் சாதனம் என்று பெயரில் மட்டும் புதுமை இருந்தால் போதாது, உள்ளிருக்கும் தொழில் நுட்பத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும். அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிறைய மாற்றங்களை தொழில் நுட்ப உலகில் செய்து வருகிறது. இதற்கிடையில் லோகோவையும் மாற்றி வடிவமைத்துள்ளது விண்டோஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

No comments:

Post a Comment