Tuesday, July 31, 2012

மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் ப்ரோ டேப்லெட் – ஒரு பார்வை


மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் ப்ரோ டேப்லெட் – ஒரு பார்வை

Micromax Funbook Pro
சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு புதிய டேப்லெட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த டேப்லெட்டுக்கு மைக்ரோமேக்ஸ் பன்புக் ப்ரோ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் பெயருக்கு ஏற்றார் போல இந்த டேப்லெட் மில்டிமீடியா மற்றும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான அத்தனை வசதிகளையும் இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட்டின் விலையும் குறைவாக இருக்கிறது. அதாவது இந்த டேப்லெட் ரூ.6,500க்கு விற்கப்பட இருக்கிறது.
இந்த மைக்ரோமேக்ஸ் டேப்லெட் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 10.1 இன்ச் அளவில் வரும் மல்டி டச் வசதி கொண்ட திரை சூப்பரான ரிசலூசனுடன் வருகிறது. மேலும் இது அகலத் திரையில் வருவதால் இதி்ல படம் பார்ப்பதற்கும் மற்றும் வீடியோ விளையாட்டுகளை விளையாடுவதற்கும் அம்சமாக இருக்கும்.
இந்த டேப்லெட் கைக்கு அடக்கமாக இருப்பதால் பயணத்தின்போது இதைப் பயன்படுத்த பக்காவாக இருக்கும். இந்த டேப்லெட்டில் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர் இருப்பதால் இதன் வேகமும் மிக அபாரமாக இருக்கும். இதன் 8ஜிபி சேமிப்பை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இதில் இருக்கும் டூவல் மாலி 400 க்ராபிக்ஸ் ப்ராசஸர் மூலம் இந்த டேப்லெட்டில் க்ராபிக்ஸ் விளையாட்டுகளை சூப்பராக விளையாட முடியும். இதன் முகப்பு கேமரா சூப்பரான வீடியோ உரையாடலை வழங்கும்.
இது எச்டிஎம்ஐ போர்ட் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டை பெரிய திரையில் இணைத்து அதன் மூலம் பெரிய திரையில் இதன் வீடியோவைப் பார்க்க முடியும். இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத் வசதியை இந்த டேப்லெட் கொண்டிருக்கவில்லை. ஆனால் வைபை வசதியைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 3ஜி வசதியையும் சப்போர்ட் செய்கிறது.
இந்த டேப்லெட் வெள்ளி மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பப்படுகிறது
.

No comments:

Post a Comment