கேரட் சாலட், குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதில் உள்ள கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. சரி, கேரட் சாலட் செய்யலாமா!!!
தேவையான பொருட்கள் :
பெரிய கேரட் - 2
பச்சைமிளகாய் - 1
வெங்காயம் (சிறியது) - 1
எலுமிச்சை சாறு - 1 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 1
வெங்காயம் (சிறியது) - 1
எலுமிச்சை சாறு - 1 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கேரட்டை தோல் நீக்கி மெலிதாக துருவிக் கொள்ளவும்.
பின் வெங்காயத்தை நீள நீளமாக மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளமாக கீறி, அதை கத்தியால் பொடியாக நறுக்கி, மல்லி இலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் எல்லாப் பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சைச்சாற்றை விட்டு கலந்து பரிமாறவும்.
இதோ ஈஸியான கேரட் சாலட் ரெடி!
English summary
Make delicious carrot salad using this simple recipe from Awesome Cuisine.
No comments:
Post a Comment