Tuesday, September 18, 2012

சுவையான சன்னா மசாலா கிரேவி

                                           Channa Masala Gravy


சன்னா சத்தானது குழந்தைகளுக்கு விருப்பமானது. இதனை சுண்டல் செய்வதோடு இல்லாமல் கிரேவியாகவும் சமைத்து சாப்பிடலாம். சுவையாக சன்னா மசாலாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
தேவையான பொருட்கள்
சன்னா – 1 கப்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி-3
மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் அரைத்தது – 1 கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
பட்டை – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
சன்னா செய்முறை
சன்னாவை 7 மணி நேரம் நன்கு ஊறவிட்டு குக்கரில் வேகவையுங்கள். 5 விசில் வரை விடவும்.
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வதக்குங்கள். தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இத்துடன் சன்னா சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி ஸ்டவ்வை மிதமாக எரிய விடவும். மற்றொரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,பட்டை,சீரகம் சேர்த்து தாளித்து மசாலாவில் சேர்க்கவும். சுவையான சன்னா மசாலா ரெடி.
இட்லி, பிரெட், சப்பாத்தி, பூரிக்கு சத்தான சைட் டிஷ் இது!
English summary
Channa masala gravy very tasty and mouth watering dish

No comments:

Post a Comment