பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளிலும் நல்ல சுவையான வகையில், வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக அந்த உணவில் சாம்பார் செய்யாமல் இருக்கமாட்டார்கள். அவ்வாறு செய்யும் சாம்பாரில் பருப்பு சாம்பாரை செய்தால், மிகவும் அருமையாக இருக்கும். அத்தகைய பருப்பு சாம்பாரை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் தக்காளியைப் போட்டு, மூடி, 2-3 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனதும், அதில் உள்ள நீரை ஓரளவு வடிகட்டி, வேக வைத்த பருப்பு மற்றும் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஓரளவு கடைந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் உப்பை போட்டு வதக்கவும். வதங்கியதும், அதில் கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு ஒரு முறை கொதிக்க விடவும்.
பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். (அதிகமாக தண்ணீர் ஊற்றி விட வேண்டாம். ஏனெனில் இன்னும் புளித் தண்ணீர் உள்ளது.)
பச்சை வாசனை போனதும், அதில் புளியை ஊற்றி, உப்பு அளவை சரிபார்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவவும்.
இப்போது சுவையான பருப்பு சாம்பார் ரெடி!!!
English summary
Make delicious Dhal Curry using this simple recipe from awesome cuisine.
No comments:
Post a Comment