Friday, September 13, 2013

மெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்!!!



                  

இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்....


மெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்!!!

எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன.



எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)

SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.



ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.

எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.

இதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.



எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.

இதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும்.

SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமின் படி நாம் இதை பார்மேட் செய்ய வேண்டும் ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.

ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.

------------------

http://tamil.gizbot.com

உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா..



சவுதி அரேபியா..

பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின்கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமேதிரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலேஉடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம்அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன்இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..!உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's LargestUniversity Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். 

இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக்கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..!!

உலகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்குமெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்றுசொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக்கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!

கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல்
பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

இதுமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம்,நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம்,உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.இத்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த்அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman
University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20
பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள்.

நன்றி
சிந்தனைகளம்