Wednesday, November 21, 2012

தமிழ் நாடு திருவள்ளூர் அருகே அதிசயம்: 2 தலையுடன் கன்று ஈன்ற எருமை மாடு

திருவள்ளூர் அருகே அதிசயம்: 2 தலையுடன் கன்று ஈன்ற எருமை மாடு

தமிழ் நாடு ,திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பெரியதெருவை சேர்ந்தவர் பழனி. பால் வியாபாரி. இவர், தனது வீட்டில் ஏராளமான பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு எருமை மாட்டை பழனி, விலைக்கு வாங்கினார். இந்த எருமை மாடு கருவுற்று இருந்தது.

இது நேற்று(நவம்பர் 21, 2012) ஒரு கிடா கன்றை ஈன்றெடுத்தது. ஆனால் அந்த எருமை கன்று வழக்கத்துக்கு மாறாக 2 தலையுடன் வித்தியாசமாக காணப்படுகிறது. தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அந்த அதிசய எருமை கன்று தனது 2 வாயாலும் தாய் எருமையிடம் பால் குடிக்கிறது.

2 தலையுடன் எருமை கன்று பிறந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனால் அக்கம் பக்கம் கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், கூட்டம் கூட்டமாக வந்து இந்த அதிசய எருமை கன்றை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

::::::::::::::::::::::::::::::::மாலைமலர்:::::::::::::::::::::::::::::::::::::::::::

நியூசிலாந்தில் எரிமலை மௌண்ட் டோங்காரிரோ சாம்பலை கக்க தொடங்கியது

                                   Up to 50 tourists were evacuated as the volcano erupted and some 90 schoolchildren were less than a mile from the action


நியூசிலாந்தில் வடக்கு தீவுப்பகுதியில் கடந்த நூறு ஆண்டுகளாக அமைதியாக இருந்த 1978 மீட்டர் நீள்முள்ள மௌண்ட் டோங்காரிரோ எரிமலை திரும்பவும் உரும தொடங்கியுள்ளது. இது கக்கி வரும் புகையானது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோல் நோக்கி எழும்பியுள்ளது.


                                  நியூசிலாந்தில் எரிமலை மௌண்ட் டோங்காரிரோ சாம்பலை கக்க தொடங்கியது
தேசிய பூங்கா அமைந்துள்ள அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளோ அல்லது குழந்தைகளோ செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானப்போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று நியூசிலாந்து கூறியுள்ளது.
                                   Some 90 pupils were just one mile from the volcano when it erupted. Teacher Lomi Schaumkel said: 'We didn't stick around long'


                                                           The last time: A blanket of ash lies over the upper area of Mount Ruapehu about 143 miles) north of New Zealand's capital, Wellington, in 2007

Has happened before: A blanket of ash lies over the upper area of Mount Ruapehu about 143 miles) north of New Zealand's capital, Wellington, in 2007

Read more: http://www.dailymail.co.uk/news/article-2236191/Mt-Tongariro-erupted-New-Zealands-Mount-Doom-volcano-Lord-Rings-


உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சைக்கு பின் நலம்


heart 

அமெரிக்காவில் உடலுக்கு வெளியே இதயம் தெரியுமாறு பிறந்த பெண் குழந்தை அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமாக உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஷ்லி. அவர் 16 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் உள்ள கருவுக்கு இதயம் வெளியே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை ஆஷ்லியிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ந்தார்.
Overjoyed: New mother Ashley Cardenas, center, looks at her daughter Audrina after the successful surgery
கருவைக் கலைத்தல், கருவிலேயே குழந்தையின் மார்பில் துளையிட்டு இதயம் வளர வழிவகுத்தல், இல்லை என்றால் குழந்தையின் இழப்பை ஏற்க தயாராகுதல் என்னும் 3 வழிகளை மருத்துவர்கள் கூறினர். ஆனால் ஆஷ்லி எந்த வழியையும் பின்பற்றாமல் குழந்தையை பெற்றார். வழக்கமாக இது போன்ற குறையுள்ள குழந்தைகள் இறந்தே பிறக்கும் அல்லது பிறந்தவுடன் இறக்கும். ஆனால் ஆஷ்லியின் குழந்தை ஆட்ரினா உயிரோடு பிறந்தாள். மேலும் அவளின் இதயத்துடிப்பும் நன்றாக இருந்தது.
Modern medicine: Doctors at Texas Children's were able to successfully place the newborn's heart back into her chest during a six-hour surgery
இதையடுத்து ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் ஆட்ரினாவுக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தை உடலுக்குள் வைத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆட்ரினா நலமாக உள்ளாள். ஆனால் அவள் உடல்நலம் தேறிய பிறகு மேலும் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது.

Discovery: The mother first found out about her daughter's potentially-deadly condition during a routine ultrasound at 16 weeks
அவளுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு இதய சிகிச்சை நிபுணரின் ஆலோசனை தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

கவிதை : வரவேற்பறைக் காட்சிகள்




வரவேற்பறையிலேயே
வைக்கப்படுகிறது
காட்சிப் பொருட்கள்
நிறைந்து வழியும்
கண்ணாடி அலமாரி.
சொல்லாமல் சொல்லும்
பெருமைப் பதக்கங்களும்,
பரிசாய்க் கிடைத்த
பஞ்சுப் பொம்மைகளும்,
வியக்க வைக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுமாய்.
கவனமாய் அடுக்கப்பட்டிருக்கும்
அதற்குள்
எப்போதும்
இடம்பெறுவதில்லை
தோல்விகளின் சின்னங்களோ,
அவமானங்களின் அறிவிப்புகளோ.
இடப்பற்றாக்குறை
நெருக்கியடிக்கையில்
இடம் பெயரும் பொருட்கள்
தொலைக்காட்சிக்கு மேலும்
இடம் பிடிப்பதுண்டு.
எங்கும் இட ஒதுக்கீடு
கிடைக்காதவை
படுக்கையறை பரணில்
பெட்டிகளுக்குள் பத்திரமாய்.
வரும் குழந்தைகள்
விளையாடக் கேட்பினும்
மூச்சு முட்ட
மூடிக் கிடப்பவை மட்டும்
திறக்கப் படுவதேயில்லை.
உள்ளிருந்து
ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்
பொம்மைகள்
இயலாமையின் உச்சத்தில்

::::::::::::நன்றி சேவி அண்ணா::::::::::::

ஆஹா...! உலகத்துல இப்படியும் இருக்கா...?








 








மேற்கு அவுஸ்திரேலியாவில் Goldfields-Esperance எனும் பகுதியில் உலகத்திலே எங்கும் இல்லாத ஒரு வித புதுமையான ஏரி ஒன்று உள்ளது. சுமார் மூன்று கிலோ மீற்றர் அகலம் கொண்ட இந்த
ஏரியின் சிறப்பம்சம் என்னவெனில் ஏரி முழுவதும் இளஞ்சிவப்பு நீரினால் சூழப்பட்டு இருப்பதுவேயாகும்.

இதுல இன்னுமொரு முக்கிய விடயம் இருக்குது அதாவது இந்த ஏரி எப்போதுமே இளஞ்சிவப்பு நீரினைக் கொண்டிருப்பதில்லை.குறிப்பிட்ட சில காலத்துக்கு மட்டுமே அது இளஞ்சிப்பாக காட்சியளிக்கிறது. உவர் தன்மையின் அதிகளவான செறிவு மற்றும் அக்காலங்களில் அவ் ஏரியில் வளரக்கூடிய ஒரு வித பச்சை நிற பாசிகளின் பக்களிப்பு என்பவறின் காரணமாக இவ் ஏரி இவ்வாறு மாற்றமளிக்கிறது












:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::thanks::::::citukuruvi:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::