01/12/2013 வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்ட கவிதை இது ..
ஆக்கம் : நவாஸ் நுஷ்மியா (கலாவெவ )
“மௌத்து” இல்லை என்று சொல்லிடுங்கள் ...??
ஏழடுக்கு மாளிகை கட்டப் போறேன்...... தரை முழுதும் பளிங்கு கல் பதிக்கப் போறேன்.....
ஏழை வந்தால் நான் ஈவிரக்கமின்றி விரட்டப் போறேன்.......
கழுத்து வரை பணம் சம்பாதிக்கப் போறேன்....... கருமியாய் அதை செலவழிக்கப் போறேன்........
எவனுக்கும் அஞ்சாமல் வாழப் போறேன் ........... நான் சோம்பலை வளர்த்து குறட்டை விட்டு தூங்கப் போறேன் .........
என்னை விட யாரும் முன்னேறாமல் தடுக்கப் போறேன்......... பொறாமையினை என் மனதில் விதைக்கப் போறேன்......
எட்டுத் திசையும் என்னைப்பற்றி சொல்லப் போறேன் ....... ஊர் முழுதும் என் பெருமை பாடப் போறேன்....
புறம் பேசி நானும் திரியப் போறேன் ......... மற்றவரை குறை கூறி தூற்றப் போறேன்................
மமதை கொண்டு நடக்கப் போறேன்.......... நான் பாரினில் -பொறுமை தொலைத்து முரடனாய் வாழப் போறேன் ....
இத்தனையும்- நான் செய்திடப் போறேன் .. என்னிடம் “மௌத்து” இல்லை என்று சொல்லிடுங்கள்.......?????
--------------------------------------
“மௌத்து” உண்டு என்றெண்ணி மறுமைக்காய் நாம் உழைத்து இறையருள் பெற்று ஈருலகிலும் வெற்றி பெறுவோம் .....