Thursday, December 6, 2012

5 வயது குழந்தை பெற்றெடுத்த குழந்தை : உலகின் மிக இள வயது தாயின் அதிசயிக்கும் சோகக்கதை ...



 2012/12/05

-M.I.Muzawwir ziyan-

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது இன்றைய அழகிய இந்த சமூகக்கட்டமைப்பினுள் ஒரு கொடிய நோயாக படர்ந்து  சிறுவர்களை
சீரழித்துக்கொண்டிருக்கிறது.இந்த கொடுமையில் ஈடுபடுபவர்கள் அனேகமாக தெரிந்தவர்களாகவும் ,மிக நெருங்கியவர்களாகவும் இருப்பதே கொடுமையிலும் கொடுமை.அவ்வாறான  கொடுமையான சம்பவங்கள் உலகளாவிய ரீதில் ஊடகங்களுக்கு தெரிந்தால் உலகம் அவதானிக்கிறது ஆனால் யாரும் அறிந்திராத கொடுமைகள் எத்தனையோ.....?????
இந்த குழந்தையின் கதை உலகறிந்தது..இறைவன் படைப்பின் அதிசயம்....ஆனால் இந்த அதிசயத்தின் பின்னாலும் ஒரு சோகம் இருக்கிறது.....

                         
ஆம் உலகின் மிக இள வயதிலேயே கர்ப்பம் தரித்து ,மிக இள வயதிலேயே ஒரு குழந்தையை பெற்றெடுத்த  தாய் பற்றியது ,
லினா  மெடினா (LINA MEDINA ) தனது  5 வயது 7 மாதம் 17 நாட்களில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து சரித்திரத்தில் இடம்பிடித்தார். இந்தச்சம்பவம் இடம்பெற்று இன்றைக்கு 70 வருடங்களுக்கு மேலாகிறது ,ஆனாலும் மருத்துவ உலகமே நம்மமுடியாமலும் நம்பித்தான் ஆக வேண்டிய சூழ்நிலையிலும் வியந்து நிற்கிறது .சிலர் "கட்டுக்கதை " என்கின்றனர்.தகுந்த ஆதாரங்கள் இந்த மருத்துவ விந்தைக்கு உண்டென்பதால் வைத்தியர்கள் இதை அறிய அசாதாரண நிகழ்வு என்கின்றனர் .
                                  
                                                                     Lina Medina after delivery
சரி விஷயத்துக்கு வருவோம்....
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பேரு (PERU ) நாட்டின் டிக்ரபோ (TICRAPO ) நகரில் வசித்த SILVER SMITH TIBURELO MEDINA ,VICTORIA LOSEA என்ற தம்பதியருக்கு 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இல் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அவள்தான் LINA MEDINA .
LINA MEDINA 5 ஆவது வயதை அடைந்த வேளையில் ,சிறுமியுடைய நடவடிக்கைகளில் பாரிய மாற்றத்தை அவதானித்த பெற்றோர் ,மகளின் வயிற்றுப்பகுதி வீங்கிப்பெருத்துச்செல்வதை கண்டு கவலையுற்றனர் .இந்த அசாதாரண வீக்கமானது வயிற்றில் கட்டிபோன்ற பருக்களினால் ஏற்பட்டு இருக்கலாம் என்றென்ணி வைத்தியரான DR .GERADO  LOZADA  வை
சிகிச்சைக்காக அணுகினர். சிறுமியை பரிசோதணைக்கு உட்படுத்திய வைத்தியர் அதிர்ந்து நின்றார் ....!!!ஆம் .அவர் வாழ்நாளில் கேள்வியுற்றிராத அந்த அதிசயம்...மருத்துவமே கண்டிராத அந்த அதிசயம்...அந்தச்சிறுமி LINA MEDINA ஒரு 7 மாத கர்ப்பிணி ....!!!வைத்தியரோ தன்னிலை மறந்தார் ,எப்படி இது சாத்தியம் ..? 5 வயதுக்குழந்தை இன்னொரு குழந்தைக்கு தாயா ..?? தன்னையே நம்பமுடியாத நிலையில் நகரிலுள்ள இன்னும் பல விசேட வைத்தியர்களை அணுகினார்...ஆம் அனைவருமே அதிசயித்துப்போய் ..அவளை பரிதாபமாய் நோக்கினர்.
                                      
                                      Lina Medina in hospital

எப்போதுமே இப்படியான செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னின்று தம் பக்கங்களை நிரப்பிக்கொள்ளும்.!அந்தக்கால உலகின் தினசரிகளெல்லாம்  தம் முன்பக்கங்களை இந்த அதிசயத்தால் நிரப்ப தவறவில்லை ....THE SAN ANTONIO LIGHT  ,1939 ஜூலை 16 இதழில் "மகப்பேற்றுக்கு முன்னமே அமெரிக்க மருத்துவ  பல்கலைகழகத்தின் உதவி சிறுமிக்கு தேவை "- "பேரு (PERU )தேசிய மகப்பேற்று மருத்துவர் சங்கம் சிறுமியை மகப்பேற்று மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல உள்ளது "எனக்குறிப்பிடப்பட்டிருந்தது...அதே போன்று 1939 ஏப்ரல் 18 ல் வெளியான PERUVIAN PAPER LA CRONIA ல் "வட அமெரிக்க படத்தயாரிப்பாளர் ஒருவர்  மகப்பேறு சம்பத்தப்பட்ட கானொளி களுக்கான 5000 டொலர் பெறுமதியான  ஒப்பந்தம் ஒன்றிற்கு அணுகினார் "என்ற செய்தி வெளியானது .ஆனாலும் இந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதாகவும் பின்னாளில் ஊர்ஜிதமானது. இருந்த போதும் வைத்திய ஆய்வுகளுக்காக சில கானொளிகளை உருவாக்கி ஏப்ரல் 21 ல்  DR .GERADO  LOZADA  பெருவின் (PERU )தேசிய வைத்தியபீடத்தில் LINA MEDINA பற்றி விளக்கமளித்ததாகவும் ..,CHICAGO PAPER என்ற பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது .

                                               
                                                                            Lina Medina with her cute infant

இப்படி பல சுவாரஷ்யங்களோடு உலகே வியந்து கிடக்கையில் ,சிறுமியை லிமா நகருக்கு அழைத்து வந்தார் DR .GERADO  LOZADA  .கருவுற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சரியாக 1 1 /2 மாதமளவில் சிறுமிக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது .சிசேரியன் சத்திரசிகிச்சை மூலமே குழந்தைப்பேறை  நடத்த வைத்தியர்கள் தீர்மானித்தனர் .DR.COLARETA.மயக்க மருந்து கொடுக்க ,DR.BUSALLEW மற்றும் DR .GERADO  LOZADA இருவரும்  இணைந்து வெற்றிகரமான சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர்.உலகமே வியந்து பார்க்கிற தருணம் May 14, 1939.........அந்த சின்னச்சிறிய சிறுமியின் சிறு உடல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தது ....ஆம் அதிசயம் ..ஆச்சர்யம்...எல்லா கண்களுமே அங்குதான் ..5 வயது குழந்தை ஒரு குழந்தையை பெற்றெடுத்த விந்தையை பிறந்த குழந்தை போலவே இந்த முழு உலகும் வியந்து மருகி நின்றது.

                                     
                                         28 years later Lina Medina
அவள் விதியை நோவதா,.?அவளுக்கு இந்த கொடுமையை இழைத்தவர்களை எண்ணி நோவதா ..??இயற்கையாய் அவளின் அரிய உடலமைப்பை எண்ணி நோவதா..??...
விந்தைக்கு மேல் விந்தை LA PRESSE MEDICALE என்ற மருத்துவ  சஞ்சிகைக்கு  DR.EDUMUNDO ESCOMEL அளித்த தகவலானது அனைவரையும் மிரள வைத்தது ..ஆம் பிறகென்ன பிறந்து 8 ஆவது மாதத்திலே MEDINA பூப்பெய்தி இருந்ததாகவும், 2 1 /2 அல்லது 3 வயதளவில் பருவப்பெண்ணாக மாறக்கூடிய தன்மை ஏற்பட்டிருந்ததாகவும்,4 வயதளவில் பருவப்பெண்களை போன்று மார்பகங்கள் வளர்சியுற்றும் 5 வயதாகும் பொழுது நன்கு முதிர்ச்சி பெற்ற எலும்புகளைக்கொண்டும் விரிவடைந்த ஒரு பெண்ணுக்குரிய உடலமைப்பை பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று MEDINA வை சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் கொடுத்த அறிக்கையானது மேலும் அனைவரையும் அதிர வைத்தது .ஊகிக்க முடியாத உண்மை...சாதாரண பூப்பெய்திய பருவப்பெண்களை  ஒத்த உடல்வாகையும் ,நன்கு முதிர்ச்சியடைந்த பாலியல் உறுப்புகளை சிறுமி கொண்டிருந்ததேயாகும் .
                                            
                                              Lina Medina with her son

அந்த ஆண் குழந்தைக்கு GERARDO என்று வைத்தியர்கள் பெயரிட்டனர். குழந்தை பிறப்பின் பொது 2 .7 KG.(6.0 LB.0.43 ST) நிறையை கொண்டிருந்தது. அந்தக்குழந்தையையும்  LINA MEDINA வை ஒரு சகோதரியாக நம்ப வைத்தே வளர்க்கப்பட்டான்.அசாதாரண அரிய உடலில் சாதாரணமாய் பிறந்தவன் தனது 10 ஆவது வயதில் தன் தாயை இனம்கண்டு கொண்டதில் வியப்பொன்றுமில்லை. 1979 ல் தனது 40 வயதில் BONE MARROW  என்ற எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டு  இறந்து போனான் GERARDO .
                                                           

LINA வுடைய இந்த உடலமைப்போ ,அவளுடைய இந்த மிக இளவயது குழந்தைப்பேறோ உலகை ஆட்டிவைத்ததென்னவோ பரிதாபமான வியத்தகு உண்மைதான்.ஆனால் அதையும் தாண்டி அவளது கதையின் மறுபக்கமும் கவலை மேல் கவலை கொள்ள வைக்கும் சோகமான முடிசுக்கூடைகளே ....அது காலத்தின் கொடுமை .அவளை அந்த கொடிய நிலைக்கு ஆளாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து சீரழித்தவன் யார் என்பதை அவளால் இனங்காண்பது முடியாத காரியமாகப்போனது பெரும் சோகமே.சரி விஞ்ஞான தொழில்நுட்பத்திலாவது அது முடியுமென்றால் காலம் அதற்கு கை விரித்தது. ஆனாலும் அவளது தந்தை, 9 வயதான மூளைக்குறைபாடுடைய சகோதரன், ஊரிலுள்ள ஒரு குடிகாரன் மற்றும் அவர்களது ANDEAN INDIAN சமுதாயத்து களியாட்டங்களில் அடிக்கடி கலந்து கொள்ளும் ஒரு சில உறவினர்கள் என சிலரை சந்தேகித்திருந்தனர்.ஆனாலும் தந்தையான SILVER SMITH யே பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைது செய்து பின்னர் ஆதாரமின்மையினால் விடுவித்தனர் .

துரதிஷ்டமான அந்த  5  வயது சிறுமியினால் எப்படி கர்ப்பம் தரிக்க முடிந்தது என்பது புரியாத புதிராகவோ அல்லது ஒரு அதிசயமான நிகழ்வாகவோ தான் இருந்தது. இளமைக்கால கல்வி நடவடிக்கைகளுக்கு  DR .GERADO  LOZADA உறுதுணையாக இருந்தார்.பின்னாட்களில் இவருடைய லிமா மெடிக்கல் கிளினிக்கில் அவருடைய செயலாளராக LINA MEDINA பணி புரிந்தார். 1972 ஆம் ஆண்டளவில் RAUL JUARDO என்பவரை திருமணம் செய்து மணவாழ்வில் நுழைந்தார். சரித்திரம் படைத்த அவளது முதல் பிரசவத்தின் பின் இன்னொரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் .இவர்கள் 2002 ஆம் ஆண்டு வரை லிமா நகரின் CHICAGO CHICO  என்ற இடத்தில் வசித்து வந்தனர்.
இவர் ஊடகங்களில் தலை காட்ட மறுத்தே வந்தார். பிரபலமான REUTERS செய்தி நிறுவனம் கூட இவரை ஒரு நேர் காணலுக்கு அணுகிப்பார்த்தது,ஆனால் இவர் பிடிகொடுக்காமல் மறுத்து விட்டார்.பின்னாட்களில் செய்திகளை தவிர்த்து ஒதுங்கியே  வந்தார்.ஆனாலும் இவர் சிறு வயது கர்ப்பத்தின் போது நிர்வாணமாய் எடுத்த புகைப்படமும்.மகன் பதினோரு மாதத்தில் எடுத்த புகைப்படமும் எல்லோராலும் அறியப்பட்ட பிரபல்யமானவை..

சிலர் இதை "கட்டுக்கதை " என்ற போதிலும் ..இவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் வைத்திருந்த BIOPSLES அறிக்கை ,கருப்பையில் சிசுக்கூட்டின் X கதிர்ப்படங்கள் போன்றவற்றால் இது சாத்தியமானது ,அரிதான நிகழ்வு என்று பல வைத்தியர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இருந்தும் 5 வயது குழந்தை ஒன்று பூப்படைதல்,தாய்மையடைதல் ,குழந்தைபெறுதல் என்பது ஊகிக்கக்கூட வேண்டாத ஒரு கஷ்டமான நிகழ்வாகவேயுள்ளது.

எது எப்படியோ இந்த அசாதாரண சோக நிகழ்வு வரலாற்றில் பதிந்து விட்டது என்னவோ உண்மைதான்.
ஆனால் இதன் பின்னால் உள்ள அந்த கொடூரமான சிறுவர் துஸ்பிரயோகம் என்ற கொடிய பேய்கள் நம் அருகாமையிலும்  இருக்கத்தான் செய்கின்றன ....எனவே நமது சிறுவர்களிடமும் நாம் எந்நேரமும் அவதானமாக இருந்து அவர்களை  காப்போம் ....!!!


SOURCE:http://en.wikipedia.org/wiki/Lina_Medina#cite_note-leon-7