தந்தையர் பற்றிய சில பொன்மொழிகள் ............
அப்பா வீட்டின் கூரை. ஏனோ யாரும் அண்ணாந்து பார்ப்பதில்லை, கூரையில்லாமல் வீடில்லை.
ஒருவருக்கு உபகாரம் செய்யவேண்டுமென்றால் முதலில் உன் தாய்க்கு செய், ஒருவருக்கு மரியாதை செய்யவேண்டுமென்றால் முதலில் உன் தந்தைக்கு செய்.
தந்தை மகனுக்கு எதையேனும் அன்போடு தரும்பொழுது இருவரும் சிரிக்கிறார்கள்.
மகன் திருப்பி செலுத்தும்போழுது இருவரும் அழுகிறார்கள்..........ஷேக்ஸ்பியர்.
தெய்வத்திற்கு தகப்பன் என்பதைவிய புனிதமான பெயர் இருக்க முடியாது......வேர்ட்ஸ்வொர்த்.
யார் வேண்டுமென்றாலும் தந்தையாக இருக்கலாம். ஆனால் அன்பிற்குரிய அப்பாவாகத் திகழ்வது தனிக்கலை.............ஆனி காடஸ்.
தன் தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும்போது அவன் சொல்வது தவறு என்று உணரும் வயதுப் பிள்ளை அவனுக்கு இருக்கிறான் -சார்லஸ் வார்ட்ஸ்வோர்த்.
நல்ல அப்பாக்கள்... பாடப்படாத, போற்றப்படாத, கவனம் பெறாத சமூகத்தின் விலை மதிப்பில்லா சொத்துகள்............பில்லி க்ரஹாம்.
தந்தைகளை மரணம் நம்மிடம் இருந்து பிரிக்கலாம். நம் நினைவுகளில் நிரம்பி அழியாத நாயகர்கள் ஆகிறார்கள் அவர்கள்.........கொன்ராட் ஹால்.
நூறு பள்ளி ஆசிரியர்களைவிட உயர்ந்தவர் ஒரு தந்தை...........ஜார்ஜ்ஹெர்பர்ட்.
வரலாற்று விநாடி வினாவில் நான் மூன்றாம் இடம் பெற்றபோது இரண்டாவது, முதலாவது இடமும் உன்னால் அடையமுடியும் என்றார் என் அப்பா. முதலிடம் வென்றதும் மாறாத புன்னகையுடன் இடங்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை; முனைதலே முக்கியம் என்றார். - தாலியா சால்ட்ஸ்.
இயற்கையின் உன்னத படைப்பு தந்தையின் ஈடில்லா இதயம்...பிரான்கோயிஸ் ப்ரிவோஸ்ட்.
தன் அன்புக்குழந்தையை பால்யத்தில் பெரிய பெண் போல உணரச்செய்யும் தந்தைகள், வளர்ந்ததும் அவர்களை சிறுமி போல மிகைத்த அன்பால் உணரச்செய்கிறார்கள்.
என்னோடும் என் தம்பியோடும் புல் நிறைந்த தோட்டத்தில் தந்தை விளையாடுவார். அன்னை, ''புற்களை மிதித்து விடாதீர்கள்!' என்பார். தந்தை எங்கள் தலை கோதியபடி, ''நாம் புற்களை வளர்க்கவில்லை; பிள்ளைகளை வளர்க்கிறோம்!'என்பார்.............ஹார்மன் கில்ப்ரேவ்.
தந்தைகளிடம் கனிவோடு இருங்கள்; நீங்கள் பால்யத்தில் இருந்தபோது உங்களை அளவில்லாமல் அன்பு செய்தவர் அவர். உங்களின் நாவில் இருந்து உருண்டோடிய முதல் மழலை மொழியை முனைந்து புரிந்துகொண்ட நம்மின் அறியா உலகின் வெளிச்சத்தில் நிறைத்தவர் இல்லையா அவர்?...மார்கரெட் கோர்டினி.
தந்தைகள் எளியவர்கள். குறையா அன்பால் அவர்கள் நாயகர்களாக, சாகசக்காரர்களாக, கதை சொல்லிகளாக, கீதம் இசைக்கும் பாடகர்களாக மாற்றப்படுகிறார்கள்....பாம் பிரவுன்.
வெறும் உதிரம் உடலால் ஆனதில்லை தந்தை - பிள்ளை உறவு. அது இதயங்களால் பிணைந்த உன்னத உறவு......ஜோஹாத் ஷில்லர்.
அதீதக் கனிவுடன் என்னிடம் நடந்துகொண்டதால் சந்தேகமே இல்லாமல் என் அப்பாவே உலகின் மிகப்பெரிய வீரர்....ஆன் எலிசபெத்.
வெற்றிகரமான தந்தையாக இருக்க எளிய விதி ஒன்றுதான். பிள்ளை வளரும் முதல் இரண்டு வருடங்கள் பிள்ளையை கண்டுகொள்ளாதீர்கள்..........ஹெமிங்வே.
(நன்றி விகடன்)