இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம்.
இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம்.
உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம்.
இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில் எந்த நம்பரை தேர்வு செய்து கொள்கிறோமோ அதை தேர்வு செய்து, பின் போன்கால் செய்து டேக்ஸி வசதிக்கு அனுகலாம்.
இது போன்று தகவல்களை கூகுளில் இன்டர்நெட் இருந்தால் தான் பெற முடியும். ஆனால் அவசர தேவைக்காக கூகுள் இந்த சேவையை வழங்குகிறது.