Monday, January 7, 2013

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .  மேலும்  பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள இரகசிய எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உணர்த்தும்.



நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் . Aquafina, Kinley, Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள இரகசிய எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ்கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது :


குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் . இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில்படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்.
------------------------------------------------------------------------
நன்றி: திரு.பாலா
abuwasmeeonline

மன அழுத்தத்தை குறைக்க உதவும் 2 இணையதளங்கள்.




நீங்கள் தொடர்ந்து கணினி முன் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்களுமின்றி நீண்ட நேரம் பணி புரிவதால் உங்கள் மனம் சலிப்படைந்து தொடர்ந்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இந்த சலிப்பு தன்மையானது மன அழுத்தத்தினை நாளடைவில் ஏற்படுத்தி விடலாம். 

உங்கள் பணியினை சிறப்பாக தொடர்ந்து செயலாற்றவும் மன ஒருநிலையினையும் 
அமைதியினையும் ஏற்படுத்தவும் இணையம் வழி நிவாரணம் தருகிறது இந்த தளங்கள்.


1.
www.donothingfor2minutes.com
இந்த தளத்தில் சென்று 2 நிமிடங்கள் உங்கள் மவுஸ் விசைப்பலகை போன்றவற்றை இயக்காது அமைதியாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது கடற்கரையில் கேட்கும் அலைகளின் ஓசையை கேட்டு கொண்டே இருங்கள் உங்களுக்கான நேரம் 2 நிமிடங்கள் நிறைவு பெற்றதும் பணியினை தொடருங்கள். 





2. www.Rainymood.com 
இந்த தளத்தை ஓபன் செய்து மென்மையான மலைசாரல் ஓசை இடிமுழக்க ஓசைகள் வெள்ள சத்தம் பறவைகளின் கீச்சிடும் ஓசைகள் என்பவற்றை 15 நிமிடங்கள் தருகிறது இந்த தளம்.
அந்த ஓசைகளை கேட்ட பின் தொடருங்கள் உங்கள் பணியினை
நாள் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் நீங்கள் உங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள். 

உலகின் மிக ஆபத்தான இடம்!

 

முன்னாள் சோவியத் ஒன்றியம் மறைத்து வைத்த மிக மோசமான ரகசியங்களில் ஒன்று அது. எழுபது வருடங்களில் இரண்டு அணுஉலை விபத்துக்கள்... 23,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பிற்கு ப்ளுட்டோனியம் பரவி 1,24,000 மனித உயிர்கள் காலத்திற்கும் முழுவதுமாக பாதிக்கப்பட்டு.... 

36,00,000 மக்கள்தொகை கொண்ட ரஷியாவின் செல்யாபின்ஸ்க் மாகாணத்திற்கு வாருங்கள். இந்த செல்யாபின்ஸ்க்கிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் 1940களின் இறுதியில் மாயக் என்ற அணுஆயுத கட்டுமானம் நிறுவப்பட்டது. 1990 வரை இந்த அணு ஆயுத கட்டமைப்பு இந்தப் பகுதியை அணு மற்றும் ரசாயன கழிவுகளால் தொடர்ச்சியாக கன்னா பின்னாவென்று சீரழித்தது. ஆனால் அதுவல்ல விஷயம்.

1957இல் இந்த அணுஆயுத தொழிற்சாலையின் குளிரூட்டும் பகுதி செயலிழந்தது. இதனால், கதிரியக்க மூலப்பொருள் சேமிப்பு காலன் வெடித்து மிகமோசமான அணு விபத்து சம்பவித்தது. அந்த அணுஆயுத மையத்தை சுற்றி 23000 சதுர கிலோமீட்டர பரப்பளவிற்கு கதிர்வீச்சு பரவியது. சிறிது நேரத்திலேயே உருவான கதிரியக்க மேகம் செல்யாபின்ஸ்க், ச்வேர்ட்லோவ்ச்க் மற்றும் டியுமென் மாகாணங்களுக்கு மேல் பரவி பொழிந்தது.
 
நதிக்கரையில் வாழ்ந்து வந்த 1,24,000 அப்பாவி மக்கள் கடுமையான அணு கதிர்வீச்சு பாதிப்பிற்கு உள்ளானார்கள். செர்னோபில் அணு விபத்து வெளியிட்டதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அணுக் கதிர்வீச்சை இந்த அணுகதிர்வீச்சு விபத்து வெளியிட்டது.

பிறகு.... அந்த இடம் உச்சபட்ச பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு சுமார் 10,700 மக்கள் சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அணுகதிர் விபத்திற்கு பிறகு உடனடியாக வியாதிகளும், மரணங்களும் அதிகரிக்கத்துவங்கின. பிறப்பு குறைபாடுகள், ஜீன் பாதிப்புகள், ஆண் பெண் மலட்டுத்தன்மை மற்றும் கேன்சர் எண்ணிக்கைகள் எகிறின. 1950 லிருந்து வெண்குஷ்டம் 41 சதவிகிதம் அதிகரித்தது. அந்த பகுதியின் நூறுகோடி காலன்கள் அளவுள்ள நிலத்தடி நீர் அனுக்கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டுளன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியின் மக்கள் தொகையில் குழந்தைபேற்றுக்கு தகுதியான மக்களில் சரி பாதி மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990இல் இந்த பகுதியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு மனிதனை ஒரே மணி நேரத்தில் கொன்று விடக்கூடிய அளவிற்கு ஆண்டு கதிர்வீச்சு நிரம்பியுள்ளதாக தெரிவித்தனர்.


 

இன்று...:


இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன.

அங்கு நீங்கள் ஒரு மணிநேரம் விசிட் செய்தால் இரண்டு நாட்கள் தொடர் தலைவலியால் அவதிப்பட நேரிடும். அந்தப் பகுதியில் காணப்படும் மீன்களில் 17,000 பெகியுரல் என்ற அளவிற்கும் காய்கனிகளில் 8,000 பெகியுரல் என்ற அளவிலும் அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிக கதிர்வீச்சு காணப்படுவதாக 1996 ல் ஒரு ஜெர்மன் ஆய்வு தெரிவிக்கிறது.

இவ்வித விஷத்தன்மைகளிளிருந்து இந்தப் பகுதியை தூய்மை படுத்தும் சர்வதேச முயற்ச்சிகள் துவங்கி விட்டன.

சரி. எப்போது முடியும்? இன்னும் நூறுவருடங்கள். மிகக் குறைந்த பட்சம்!

-------------------------------------------------------------------

நன்றி:இந்நேரம்

பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து






ஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்கும் பல்வேறு காரணிகளில் 'நாடு' என்பது மிக முக்கியமானது. அமைதியான சூழல், பொருளாதர வளர்ச்சியும் ஒரு மனிதன் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளின் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன.

அந்த வகையில் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் பிறந்து வாழ்வதற்குரிய சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் இலங்கை 63 ஆவது இடத்திலும் இந்தியா 66 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

எதிர்வரும் வருடத்தில் சுபீட்சமான, மன நிறைவான வாழ்க்யை வாழ்வதற்கு ஏற்ற சூழலை கொண்ட நாடு எது எனும் ஆராயும் முயற்சியை பிரிட்டனின் பொருளாதார புலனாய்வு பிரிவு மேற்கொண்டுள்ளது.

மக்களின் மனநிறைவான கருத்துக்கள், மற்றும் நாடுகளின் வாழ்க்கை தரம் என்பவற்றை உள்ளடக்கி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் பிரகாரமே சுவிட்சர்லாந்து வாழ்வதற்கு ஏற்ற முதல் நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிறப்பவர்கள் மகிழ்ச்சிகரமானவர்களாக காணப்படுவதுடன் தரமான உடல் ஆரோக்கிய நிலையானது அவர்களது ஆயுளை தீர்மானிப்பதாகவும் சுகாதார மற்றும் பொது நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. 

அதேபோல் ஸ்கெண்டிநேவியா நாடுகளான நோர்வே, சுவிடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளதாக அவ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

புவியியல், குடியியல்; மற்று கலாசாரம், பொருளாதார நிலை உட்பட்ட 11 விடயங்களை பிரதானபடுத்தி இந்த ஆய்வறிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹோங்கோங் ஆகிய நாடுகளே 2013 இல் சிறப்பாக வாழக்கூடிய முதல் 10 நாடுகளாகும். இதில் அமெரிக்கா 16 ஆவது இடத்திலும் பிரிட்டன் 20 ஆவது இடத்திலும் சீனா 49 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.



நன்றி :தமிழ் கண்ணாடி

செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்!-recovery software





நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க வீடியோ இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.என்னடா இது ஆச்சரியம் என்று யோசிக்கவேண்டாம் !முதலில் உண்மைச் சம்பவம் 2 டைப் பார்ப்போம். பின்னர் விடையத்துக்கு வரலாம் ! 

அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்துவந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. 

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத்தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன்ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோதுசும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து டிலீட்(delete) செய்த ஒருவீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத்தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம். 

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன்ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் எனஅப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியானகேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலை அரை நிர்வாணமாகப் படம் பிடித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம், அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு போனில் அந்த வீடியோவை அழித்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. டிலீட் செய்த ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர். 





அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் !(recovery software)
மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும், ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது. செல்போன், கம்ப்யூட்டர்பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் அதைப் பார்க்க முடியும்என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. உங்கள் மோபைல் போனை, சிம்பிளாக அதன் சார்ஜர்வயரைப் பாவித்து கணணியில் இணைத்தால் போதும். இந்த ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலமாக, அழிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மட்டும் உடனே எடுத்துவிட முடியும். எனவே இனிமேல்,ஜாக்கிரதையாக இருப்பது நல்லது ! உங்கள் மோபைல் போனை யாரிடமாவது கொடுப்பதோ, இல்லை திருத்த வேலைகளுக்காகக்கொடுப்பதையோ, உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நம்பிக்கையானவர்களிடம் கொடுப்பது நல்லது !.

-------------------------------------------------------------------------

நன்றி புதிய உலகம்.காம்

ஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..?




முன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவம் ஏற்பட்டது
   



இன்றைய சூழ்நிலை அவ்வாறு இல்லை பெண்ணுக்கு 20-25 வயதிலும் ஆணுக்கு 25-30 வயதிலும் திருமணம் நடக்கிறது. மேலும் இன்றைய கால இளைஞர்களோ காலம் பாராமல் உழைக்கிறார்கள். அன்றைய காலத்தில் உடல் உளைச்சல் அதிகம் இருந்தது இன்றைய கால கட்டத்திலோ மன உளைச்சல் அதிகமா இருக்கிறது .. மேலும் பணம் மற்றும் வேலைக்காக பெற்றோரை விட்டு தனிமை படுத்தப்படுகிறார்கள். அதற்க்கு மேல் தொலைகாட்சிகள், திரைப்படங்கள் செக்ஸ் மற்றும் காதலையே மையமாக கொண்டு உள்ளது.

அந்த காலத்தில் தேவதாசி முறை என்று இருந்துகிறது இந்த காலத்திலும் இருக்கிறது மேலும் பல நோய்களும் இருக்கிறது இக்காலத்தில்.

மேலும் இணையம் தொட்ட இடமெல்லாம் செக்ஸ், நிர்வாண படங்கள், காட்சிகள்.


 
இதற்க்கு எல்லாம் காரணம் பணம்.

பணம் இருக்கிறவன் தனக்கு தேவையானதை செலவழித்து பெற்று கொள்கிறான். இல்லாதவன் பெற்றோரால் கண்டிப்புடன் வளர்க்க பட்டவனோ எவ்வாறு அடையலாம் என்பதை சிந்திக்கிறான். அவன் மனதிற்கு வலு கொடுப்பதோ மது மற்றும் தனிமை.

இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் பொருந்தும்

ஏன் ஆண்களை மற்றும் குற்றவாளிகளாக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

எத்தனை இளைஞர்கள் (ஆண் மற்றும் பெண்) தங்களது உறவினர்களால் தினமும் வீட்டில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்த படுகிறார்கள். நாளாக நாளாக தங்களுது தொல்லைகளை கூட்டிக்கொண்டே போகிறார்கள். கையை தொடுவதில் ஆரம்பித்து செக்ஸ்க்கு இணங்க வைப்பது வரை.

இதற்கு எல்லாம் காரணம் மனம் மற்றும் தனிமை. நண்பர்களே உங்கள் மனதை வலிமை படுத்துங்கள் . தனிமையை தவிர்
த்துடுங்கள். எவ்வாறு

1.நண்பர்களுடன் பேசுங்கள். இணையத்தை தவிர்த்
திடுங்கள்.(தேவைக்கு மட்டும் இணையத்தை உபோயோகிங்கள்)

2. பெற்றோர் உடன் மனம் விட்டு பேசுங்கள். பெற்றோர்களே குழந்தைகளும் மனம் மற்றும் உணர்ச்சிகள் இருக்கிறது என்று சிந்தியுங்கள்

3. பெற்றோர்களே குழந்தைகளை தனிமை படுத்தாதிர்கள். பணம் முக்கியமில்லை இருக்கிறது ஒரு வாழ்க்கை உங்கள் குழந்தைகளுடன் செலவழியுங்கள் உங்கள் பொன்னான நேரத்தை.

4. பெரும்பாலும் குழந்தைகள் முன்னால் உங்கள் ஊடல்களை தவிர்த்துடுங்கள்.

5. 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்

6. நண்பர்களுடன் விளையாடுங்கள்

7. உங்களுடன் பழகுபவர்களை சகோதர சகோதிரகளாய் சிந்தியுங்கள்

8. பணம் ஒரு பெரிய விஷயம் அல்ல. வாழ்கையில் இருக்கிறதை வைத்து சந்தோசமாக வாழ வழியை தேடுங்கள்.

9. தயவு செய்து வரத
ட்சனை வாங்குவதோ கொடுப்பதோ தவிருங்கள்.

10. எவரும் நல்லவர் இல்லை. 

      ஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..

 
செக்ஸ் என்பது எல்லோர்க்கும் ஏற்படும் ஒரு இயல்பான உணர்ச்சி. அதற்கனே சில வழிமுறைகள் இருக்கின்றன ஏனென்றால் நாம்
மனிதர்கள் ஆறறிவு கொண்டவர்கள்.

குழந்தைகளை குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள்.

நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்.

------------------------------------------------------------------------------

--திரா(முகநூல்)

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

 


பிறந்து 55 நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....



உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!


 
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?


 

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது.

---------------------------------------------------------------------

நன்றி: ஐ லவ் தமிழ்நாடு