ஆட்டுக்கால் பாயா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் ருசி தான். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மிளகு அதிகமாக சேர்க்கும் போது சுவையோடு மணமும் சேர்ந்து நம்மை இன்னும் கவர்கிறது. சரி பெப்பர் பாயா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.
பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!
இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!
English summary
Pepper Paya is quite popular in Tamil Nadu. It is fondly called as aattu kaal soopu. Above is the recipe to prepare a mouth watering pepper paya.
No comments:
Post a Comment