Tuesday, September 18, 2012

எலும்பு வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்


அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இது தோற்றத்தில் வெளிர் பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவையானது.
சில சமயம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.
செயல்திறன் மிக்க சத்துக்கள்: பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து. ஆன்டி ஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன.
மேலும் பேரிக்காயில் தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 பேன்றவை ஆகியவை அடங்கியுள்ளன.
நன்மை தரும் நார்ச்சத்து: பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.
புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி செரிந்துள்ளது.
எலும்பு வளர்ச்சிக்கு: இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் பேரிக்காய் சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு நன்மை ஏற்படும். கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.
குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.
பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் ஒரு சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் சாப்பிடக் கொடுத்தால் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

No comments:

Post a Comment