Tuesday, September 18, 2012

ருசியான...சிக்கன் ஹலீம்

                                  Chicken Haleem Recipe



சிக்கன் ஹலீம் ஹைதராபாத்தில் நோன்பு நேரத்தில் செய்யப்படும் ஒருவித சுவையான டிஷ். அதிலும் ரம்ஜான் அன்று வீட்டில் செய்யப்படும் பிரியாணிக்கு சைடு டிஷ் ஆக சிக்கன் ஹலீம் ரெசிபியை செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். அந்த சிக்கன் ஹலீம் ரெசிபியை செய்வது என்பது மிகவும் ஈஸி. பொதுவாக ஹலீம் செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் இந்த ஹலீம் மிக்ஸர் கூட கடைகளில் ரெடிமேட்டாக விற்கப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் வாங்கி சமைப்பதை விட, வீட்லேயே அந்த ஹலீமிற்கான பொருட்களை வைத்து ஈஸியாக குறைந்த நேரத்திலேயே சமைத்துவிடலாம். அப்போது அந்த சிக்கன் ஹலீம் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
கோதுமை - 2 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/2 கப் (ஊற வைத்து, வேக வைத்தது)
பட்டை - 2
பிரிஜி இலை - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
புதினா - 1/2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, வெங்காயத்தை போடடு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்திருக்கும் கோதுமையை போட்டு, அதில் 6 கப் தண்ணீர் விட்டு, 1/2 மணிநேரம் நன்கு கோதுமை மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும். பிறகு வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் பிரிஞ்ஜி இலை சேர்த்து தாளித்து, பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மிளகு தூள், சீரகப் பொடி மற்றும் 1/2 கப் தண்ணீர் விட்டு, 2 நிமிடம் கிளறவும்.
பிறகு அதில் சிக்கனை கழுவி போட்டு, அரைத்த வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறவும். இப்போது அதில் வேக வைத்துள்ள கோதுமை மற்றும் சிறிது சேர்க்கவும். பின் உப்பை சரி பார்த்து, வேண்டுமென்றால் உப்பை போட்டு, தீயை குறைவில் வைத்து, 1/2 மணிநேரம், கிரேவி கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர் அதனை இறக்கி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் தூவி, எலுமிச்சை சாற்றை அதில் விட்டு, ஒரு முறை கிளறி, பொன்னிறமாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை தூவி பரிமாறவும். இப்போது சுவையான சிக்கன் ஹலீம் ரெடி!!!

English summary
My Chicken Haleem Recipe, is a time saving recipe which can be prepared and served with in one and a half hour. Usually Haleem is slowly cooked for six to seven hours which results in a paste like consistency with the taste of spices and meat blending with wheat but my Chicken Haleem recipe is very easy to make and prepare.


No comments:

Post a Comment