Tuesday, September 18, 2012

சப்பாத்தி மட்டன் ரோல் ரெஸிபி

                                             How Make Delicious Chappathi Mutton Roll




வீடுகளில் சாதரணமாக சப்பாத்திக்கு காய்கறி குருமாவோ, சிக்கன், மட்டன் கிரேவியோ செய்து கொடுப்பார்கள். கிரேவி தொட்டு சாப்பிட சோம்பேரித்தனம் பட்டுக்கொண்டு குழந்தைகள் வெறும் சப்பாத்தியை சாப்பிடுவார்கள். குழந்தைகளை மட்டன், சிக்கன் சாப்பிட வைக்க அதை சப்பாத்தியினுள் வைத்து ரோல் மாதிரி செய்து கொடுக்கலாம். இன்னும் ஒரு சப்பாத்தி ரோல் குடுங்க அம்மா என்று கேட்டு சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஒரு கப்
மட்டன் கொத்துக்கறி – 200 கிராம்
சின்னவெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1
மட்டன் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவில் சிறிதளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். சப்பாத்திகளை உருட்டி தாவாவில் போட்டு செய்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
மசாலா செய்முறை
கொத்துக்கறியை நன்றாக கழுவி வைக்கவும். ப்ரசர் ஃபேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கிய உடன் இதில் தக்காளியை நறுக்கி போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் கொத்துக்கறியை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும். லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு மூன்று விசில் விடவும். மட்டன் நன்றாக வெந்து விடும்.
சப்பாத்தி அளவிற்கு முட்டையை நன்றாக அடித்து அதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஆம்லேட் செய்து கொள்ளவும்
சப்பாத்தி ரோல்
சப்பாத்தியின் மேல் ஆம்பலேட் வைத்து ஆம்பலேட்டின் மேலே செய்து வைத்துள்ள கொத்துக் கறி மசாலாவை வைத்து சப்பாத்தியை சுருட்டவும். இந்த சப்பாத்தி ரோலுடன் தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிடலாம் கொத்துக் கறி மசாலாவிற்கு பதிலாக வெஜிடேபிள் மசாலா சிக்கன் மசாலா எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். குட்டீஸ்க்கு விருப்பமான சப்பாத்தி ரோல் ஈசியா செய்யலாம்.


English summary
Make delicious Chapati Rolls using this simple recipe from Awesome Cuisine.

No comments:

Post a Comment