வெண்டைக்காய் அடிக்கடி வாங்கி, நன்கு சுவையாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, பி உயிர்ச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் இது உடலில் சிறுநீரைப் பெருக்கும், நாள்பட்ட கழிச்சல் நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். அதிலும் அந்த வெய்டைக்காயை மசாலா போல் செய்து, சாதத்தோடு போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு அளவே இருக்காது. அத்தகைய வெண்டைக்காயை வைத்து எப்படி மசாலா செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/4 கப்
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 3
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/4 கப்
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி சிறு நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதக்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகப்பொடி, மிளகுத்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, வேண்டிய அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பின்பு அதில் வெண்டைக்காயை போட்டு நன்கு மசாலா சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் தேங்காய் பாலை விட்டு, ஒரு 3-4 நிமிடம் கொதிக்க விட்டு, அதனை இறக்கி கொத்தமல்லியை தூவவும்.
இப்போது சுவையான வெண்டைக்காய் மசாலா ரெடி!!!
English summary
Make delicious ladies finger masala using this simple recipe from awesome cuisine.
No comments:
Post a Comment