Tuesday, September 18, 2012

பீர்க்கங்காய் குழம்பு

                                        Delicious Ridge Gourd Curry


பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சிறப்புடைய பீர்க்கங்காயை வாரத்திற்கு ஒரு முறை செய்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது அந்த பீர்க்கங்காயை வைத்து எப்படி குழம்பு வைப்பதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் பீர்க்கங்காயை கழுவி, தோல் சீவி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை சற்று அதிகமாக ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகப்பொடி போட்டு தாளிக்கவும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து நன்கு வதக்கவும். காய் வெந்ததும், அதில் தக்காளி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, சிறிது ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பிறகு உப்பை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். (முக்கியமாக உப்பை காய் வேகும் போது சேர்க்க வேண்டாம். இல்லையென்றால் காய் சரியாக வேகாமல் இருக்கும்.)
இப்போது சுவையான பீர்க்கங்காய் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
English summary
Make delicious Ridge Gourd Curry using this simple recipe from Awesome Cuisine.


No comments:

Post a Comment