கிழங்கு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். அதிலும் கிழங்கு வகைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே அத்தகைய கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கை ஒரு வறுவல் செய்து சாப்பிட்டால், மிகவும் சுவையானதாக இருக்கும். இப்போது அந்த சேப்பங்கிழங்கு வறுவலை எப்படி செய்தென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சேப்பங்கிழங்கு - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சில்லிப் பவுடர் - 1 டீஸ்பூன்
கார்ன் ப்ளார் பவுடர் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சில்லிப் பவுடர் - 1 டீஸ்பூன்
கார்ன் ப்ளார் பவுடர் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அதனை 2 அல்லது 3 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சில்லிப் பவுடர், கார்ன் ப்ளார் பவுடர், மிளகாய் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பிசைந்து அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை போட்டு, பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி!!! இதனை தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
English summary
Make delicious cococasia roast using this simple recipe from awesome cuisine.
No comments:
Post a Comment