Tuesday, September 18, 2012

உருளைக்கிழங்கு முட்டை கிரேவி

                                       Potato Egg Gravy




உருளைக்கிழங்கு என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அத்தகைய உருளைக்கிழங்கை முட்டையுடன் சேர்த்து கிரேவி போல் செய்து சப்பாத்தி, பூரியுடன் சைடு டிஸ்-ஆக தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அந்த உருளைக்கிழங்கு முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை - 2
கிராம்பு - 4
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். பின் வேக வைத்த ஒவ்வொரு முட்டையையும் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
பிறகு உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, அதன் தோலை உரித்து விட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து தக்காளி மற்றும் வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கை போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு, சிறிது உப்பு சேர்த்து கிரேவி போல் கிளரவும்.
மசாலாவானது நன்கு கொதித்ததும், அதில் முட்டையை போட்டு, 2 நிமிடம் பிரட்டவும். ஏனெனில் அப்போது தான் மசாலாவானது முட்டையுடன் சேரும்.
பிறகு அதனை இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம். இப்போது சுவையான உருளைக்கிழங்கு முட்டை கிரேவி ரெடி!!!
English summary
Make delicious potato egg gravy using this simple recipe from awesome cuisine.

No comments:

Post a Comment