Saturday, November 10, 2012

பெண்களே மருத்துவமனைக்கு தனியாக செல்லாதீர்

                                       பெண்களே மருத்துவமனைக்கு தனியாக செல்லாதீர்


மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், 

தனியார் மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். 

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. 

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.


:::::::நன்றி::::::மாலைமலர்:::::::

“கீரை, வெள்ளைப் பூண்டு உடல் பருமனை குறைக்கும்”


“கீரை வெள்ளைப் பூண்டு உடல் பருமனை குறைக்கும்”










உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள படாத பாடுபடுகின்றனர்.இவற்றையெல்லாம் விட தங்களது அன்றாட உணவில் கீரை வகைகள் மற்றும் வெள்ளைப்பூண்டை பயன் படுத்தினாலே போதும். உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இவை உணவுப் பொருட்களில் உள்ள கார்போஹைட் ரேட்ஸ் என்னும் மாவுப் பொருட்களை ரசாயன மாற்றங்கள் மூலம் நொதிக்கச் செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடலில் போதுமான அளவு இன்சுலின் ஹார்மோன்கள் சுரக்க செய்கின்றன.
இதன் மூலம் குளுக்கோஸ் அளவு சீராகி உடல் பருமன் மற்றும் பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
:::::::நன்றி::::::மாலைமலர்:::::::