பழங்களை வாங்கினால் அவற்றை சாப்பிடும் போது அவற்றை நறுக்கி சாப்பிடுவோம். ஆனால் அவ்வாறு நறுக்கியதை முற்றிலும் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும். அப்போது அவற்றை சேகரித்து வைப்போம். அவ்வாறு சேகரித்து பாதுகாப்பாக வைக்கும் போது, அந்த பழங்கள் சில சமயங்களில் வாடி, ப்ரௌன் நிறத்தில் ஆகிவிடும். ஆகவே அவ்வாறு ஏற்படாமல் இருக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து, பழங்களை நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட்டு, ஆரோக்கியமாக இருக்கலாமா!!!.
ஆப்பிள்
பழங்களிலேயே நறுக்கியதும் சாப்பிட்டாக வேண்டும் என்று இருப்பது, ஆப்பிள் தான். அத்தகைய ஆப்பிள் நறுக்கியப் பின்னர் கெடாமல், நிறம் மாறாமல் இருக்க, சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது மற்ற வினிகரைத் தடவி, ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால், நிறம் மாறாமல் ப்ரஷ் ஆக இருக்கும். இல்லை நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்றால், எலுமிச்சை சாற்றை தடவி வைக்க வேண்டும்.
வெண்ணெய் பழம்
வெண்ணெய் பழம் என்று தமிழில் அழைக்கப்படும் அவோகேடோ பழத்தை நறுக்குவது என்பது எளிதானது. இது மிகவும் மென்மையாக இருக்கும். அவ்வாறு நறுக்கி முழுதும் சாப்பிட முடியவில்லையென்றால், அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, ஒரு டப்பாவில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் இந்த பழம் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கெடாமல் இருக்கும்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் நறுக்கியதும் விரைவில் ப்ரௌன் நிறத்தை அடைந்துவிடும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே கொய்யாப்பழம் நிறம் மாறாமல் இருக்க அதன் மேல் சிறிது எலுமிச்சை சாறு அல்லது நறுக்கிய பெரிய பச்சை மிளகாயை அதன் மேல் தெளிக்க வேண்டும். இதனால் நன்கு ப்ரஷ்ஷாக இருக்கும்.
பப்பாளி
நறுக்கிய பப்பாளி துண்டுகளையும் சரி, சாதாரணமான பப்பாளியையும், ஒரு சுத்தமான பேப்பரால் சுற்றி, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் பப்பாளி பழம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை நறுக்கியப் பின், அதனை ஒரு பாலிதீன் பையில் போட்டு, சுற்றி வைக்க வேண்டும். இதனால் நறுக்கிய எலுமிச்சைப் பழம் கெடாமல், சில நாட்கள் இருக்கும்.தர்பூசணி- தர்பூசணிப் பழத்தை அறுத்து சாப்பிடும் போது, அதனை முழுவதும் சாப்பிட முடியவில்லை என்றால், ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைத்தால், பழத்துண்டுகள் ப்ரஷ்ஷாக இருக்கும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தையும் தர்பூசணியைப் போல் நீண்ட நாட்கள் வைத்திருக்க, நல்ல காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும். இதனால் பழத்தில் உள்ள ஈரப்பசை, அப்படியே இருக்கும்.
English summary
Ideally you should never keep cut fruits for a long time. But, you cannot ignore the fact that sometimes this happens no matter what is right and what is wrong. In such cases there is a need to store these fruits in a healthy way so that they do not dry or get brown. Here are some of the best tips to be used st home for keeping the fruits fresh for long.