பீஜிங்: இந்தியாவின் 20 மாநிலங்கள் வரலாறு காணாத வகையில் சந்திக்க நேரிட்ட மிகப் பெரும் மின் தடையின் மூலம் சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள முனைந்திருக்கின்றன.
பாதி இந்தியாவை இருளில் மூழ்க வைத்த மின்தடை என்பது ஏதோ ஒரே ஒரு காரணத்தால் நிகழ்ந்தது அல்ல.. இந்தியாவின் வளர்ச்சியின் எதிரொலியாகவே இதைக் கருத வேண்டும் என்பது வளரும் நாடுகளின் கருத்தாக இருக்கிறது என்கின்றன சீன ஊடகங்கள்.
இது பற்றி சீன ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்து:
சீனாவைப் பொறுத்தவரையில் இன்னமும் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நாட்டின் மின் உற்பத்தியை இரண்டுமடங்காக்க வேண்டிய நிலை இருக்க்கிறது. அனல் மின்சார தயாரிப்பதைவிட நீர் மின்சார தயாரிப்புக்கு சீனா முன்னுரிமை கொடுத்தாலும் பொதுமக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்கு பிறகு அணுமின் உற்பத்தியின் பக்கம் கவனம் செலுத்துவது குறைந்து போயிருக்கிறது. இதேபோல் காற்றாலை மூலமான மின் உற்பத்தியும்கூட சீனாவின் மின் தேவையை நிறைவு செய்துவிடாத நிலையே நீடிக்கிறது.
இதனால் வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் அதன் தேவைக்கேற்ப மின்சார தயாரிப்பிலும் உரிய கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. இதை அனைத்து வளர்ந்து வரும் நாடுகளும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment