அழகான புகைப்படங்களை தங்களது ஸ்மார்ட்போன்களில் பெற வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்? இதற்கு சிறந்த சில வழிகளை இங்கே காணலாம். குறிப்பாக அழகான காட்சிகளை படம் பிடிப்பது சாதாரண விஷயம் தான்.
ஆனால் அழான காட்சிகளை இன்னும் அழகாக படம் பிடிக்க ஆசையா? முதலில் அடிப்படை வழிகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களது லென்ஸில் எந்தவிதமான தூசியும் படியாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். பொதுவாக ஸ்மார்ட்போன்களை பர்ஸ் மற்றும் பாக்கெட்களில் வைத்து கொள்வதால் நிறைய தூசி படிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படியே தூசி படிந்தாலும் அதை அகற்றுவது அவசியம்.
புகைப்படங்கள் எடுக்கும் போது ‘ஷேக்’ ஆகாமல் பார்த்து கொள்ளவது மிக அவசியம். அப்படி புகைப்படம் எடுக்கும் போது ஸ்மார்ட்போனுக்கு சரியான பிடிமானம் இல்லை என்றால் தெளிவான காட்சியை படம்பிடிக்க முடியாது. இதனால் சில பொருட்களை ஊன்றுகோலாக வைத்து கொள்வதும் கூட சிறந்த வழி தான்.
தெளிவான புகைப்படங்கள் எடுக்க போதிய வெளிச்சம் தேவை. சில ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த புகைப்படங்களை வழங்கும் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக வெளிச்சம் கேமராவில் படுவது போல் வைத்து எடுப்பது காட்சிகளை தெளிவாக காட்டாது. இதனால் வெளிச்சம் அதிகமாக உள்ளதா? அல்லது குறைவாக உள்ளதா? என்பதை கவனத்தில் வைத்து கொள்வது நல்லது.
எந்த ஒரு புகைப்படத்தையும் சரியான கோணத்தில் வைத்து எடுப்பது சிறந்தது. முக்கிய கோணத்தை மனதில் வைத்து எடுப்பதன் மூலம் சிறந்த, எடுக்கும் புகைப்படத்தினை வித்தியாசமானதாகவும் மற்றும் சிறப்பானதாகவும் கொடுக்க முடியும்.
புகைப்படம் எடுப்பதெல்லாம் சரி. ஆனால் எடுக்கும் புகைப்படங்கள் மங்கலாக இருக்கிறதே என்றும் சிலருக்கு தோன்றும். ஸ்மார்ட்போன்களில் துல்லியத்தினை மாற்றி கொள்ள ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் அதிக துல்லியத்தினை தேர்வு செய்து கொள்வதன் மூலம் தெள்ளத் தெளிவான காட்சிகளை பெற முடியும்.
முடிந்தளவு டிஜிட்டல் சூம் வசதியினை தேர்வு செய்யாமலிருப்பது நல்லது. தூரத்தில் இருக்கும் காட்சிகளை கூட சூம் வசதியினை பயன்படுத்துவதால் பக்கத்தில் காண முடியும். ஆனால் இந்த வசதியின் மூலம் காட்சிகள் மங்களாக தெரிவதற்கு வாய்புள்ளது.
புகைப்படம் எடுக்கும் முன்பு ஸ்மார்ட்போன் எந்த மோடில் இருக்கிறது என்று பார்த்து கொள்ளவது அவசியம். தெளிவான புகைப்படத்தினை எடுக்க மேக்ரோ மோட் சிறந்ததாக இருக்கும்.
காட்சிகளை படம் பிடிக்கும் போது குறித்த நேரத்தில் பட்டனை க்ளிக் செய்வதும் அவசியம்.
மேல் கூறப்பட்ட வழிகளை கடைபிடிப்பதனால் காட்சிகளை அழகாக புகைப்படத்தில் காண முடியும். இந்த வழிகளை பின்பற்றியும் இன்னும் தெளிவான புகைப்படங்கள் வேண்டும் என்று நினைத்ததால், சிறப்பான புகைப்படங்கள் எடுக்க சிறந்த அப்ளிக்கேஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்ற இயங்குதளத்திற்கென்றே பிரத்தியேகமான அப்ளிக்கேஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதை டவுன்லோட் செய்து கொள்ளவதும் நல்லது.
No comments:
Post a Comment