கோலாலம்பூர்: புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கிட்டத்தட்ட மொட்டையடித்த மாதிரி முடியை வெட்டிய பிரபல மலேசிய டிவி சேனலான என்டிவி7 செய்தி வாசிப்பாளர் ராஸ் அதிபா முகமது ரட்சியை அந்த சேனல் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
பிரபல மலேசிய டிவி சேனலான என்டிவி7ல் செய்தி வாசிப்பாளராக பகுதி நேரமாக வேலை பார்ப்பவர் ராஸ் அதிபா முகமது ரட்சி. அவர் தேசிய புற்றுநோய் கவுன்சிலின் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆதரிக்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட மொட்டையடித்தது போன்று தனது முடியை வெட்டினார். இதையடுத்து அவருக்கு பலர் போன் செய்து பத்வா விடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது தலைமுடி ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு வளரும் வரை அவரை செய்தி வாசிக்கவிட முடியாது என்று கூறி அந்த டிவி சேனல் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாக ஸ்டார் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அதிபா கூறுகையில்,
நான் ஆண்டவனுக்கு பதில் சொல்ல கடைமைப்பட்டவள். இஸ்லாம் மக்களுக்கு உதவச் சொல்கிறது. நான் ஒரு முஸ்லிம் பெண். தினமும் 5 வேளை தொழுகிறேன். என் மதத்தை நேசிக்கிறேன். என்னுடைய உறவினர் புற்றுநோயால் இறந்தார். என் மாமா புற்றுநோயால் பாதிகப்பட்டு தப்பினார். என் நண்பர்கள் பலரும் இந்த இன்னல்களை அனுபவிக்கின்றனர். அது என் மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
இதனால் தான் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக முடிவை வெட்டினேன் என்றார்.
No comments:
Post a Comment