Monday, December 3, 2012

செயற்கை மனித மூளை தயாரிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

                   Test: The 'brain' was able to process visual cues and reproduce them
                                          Test: The 'brain' was able to process visual cues and reproduce them on a piece of paper


னித உடலுக்கு தேவையான செயற்கை உறுப்புகளை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது செயற்கை மனித மூளையும் உருவாக்கப்பட்டுள்ளது. இது மனித மூளையை போன்று நுண்ணறிவுடன் செயல்படுகிறது. சூப்பர் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. 
Brain power: A simplified diagram showing the process of Spaun

                                                     Brain power: A simplified diagram showing the process of Spaun
டிஜிட்டல் கண் மற்றும் ரோபோடிக்கையும் உருவாக்கப்பட்டு அதன்மூலம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த செயற்கை மூளை 25 லட்சம் நரம்பணுக்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான் என பெயரிடப்பட்டுள்ளது. 

இதை கனடாவில் உள்ள வாட்டார்லு பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜி னீயர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். செயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மூளை மனித மூளையை போன்று துல்லியமாக செயல்படுகிறது. இது விஞ்ஞான உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.



Scientists create 'most realistic artificial human brain yet' that can count and even pass simple IQ reasoning tests

  • -Spaun (Semantic Pointer Architecture Unified Network), consists of 2.5 million simulated neurons and can perform eight different tasks-
  • -Tasks range from copy drawing to counting, to question answering and fluid reasoning-


Read more: http://www.dailymail.co.uk/sciencetech/article-2241088/Scientists-create-realistic-artificial-human-brain--pass-simple-IQ-tests.html

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் மைக்ரோ சிப்


               
               The microchip-embedded badge student Andrea Hernandez would be required to wear at John Jay                    
                                        High  School in Texas or be expelled – she is fighting back

அமெரிக்காவின் சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் அடையாள அட்டையில், மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு ஜி.பி.எஸ்., தொழில் நுட்ப முறைப்படி மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
 
வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்பும், பிறகும் மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்களது வருகை பதிவேட்டில் வருகை பதிவு செய்யப்படுகிறது.
 
கடந்த 2005-ம் வருடம் கலிபோர்னியா மற்றம் ஹுஸ்டன் மாகாணங்களில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்களின் கடும் எதிர்ப்பால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் தற்போது நடைமுறை யில் உள்ளது.


                         (Reuters / Kai Pfaffenbach)                   
இந்த நடைமுறையினால் தனது தனித்தன்மை பாதிக்கப்படுகிறது என ஆன்ட்ரியா என்ற மாணவி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை கிறிஸ்தவ மதப்படி தவறானது என ஆன்ட்ரியாவின் பெற்றோரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
                  

இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம் அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, மைக்ரோ சிப் பள்ளி வளாகத்துக்குள் மட்டும்தான் வேலை செய்யும். அதற்கு மேல், மாணவர்களின் நடமாட்டத்தை அறிய வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளது.


புதன் கிரகத்தில் ஐஸ் படிவத்தில் தண்ணீர்: நாசா கண்டு பிடித்தது


[optional image description]
Ice, ice, baby! This 68-mile-diameter indented crater, located in the north polar region of Mercury, has been shown to harbor water ice. (AP Photo/NASA/Johns Hopkins University Applied Physics Laboratory/Carnegie Institution of Washington)

புதன் கிரகத்தில் ஐஸ் படிவத்தில் தண்ணீர் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.
 
சூரிய குடும்பத்தில் புதன் முதலாவது கிரகமாக உள்ளது. எனவே இது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. இருந்தாலும், இங்கு தண்ணீர் ஐஸ் படிவங்களாக அதிக அளவில் உள்ளது.
 
இங்கு 10 ஆயிரம் கோடி டன் முதல் 1 லட்சம் கோடி டன் வரை ஐஸ் கட்டிகள் படிவங்களாக உள்ளன. இது வாஷிங்டன் அளவில் 1 1/2 மைல் ஆழத்துக்கு புதைந்து கிடப்பதாக தெரிகிறது.
 
இதை அமெரிக்காவின் நாசா மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா விண்வெளிக்கு அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள போட்டோ மூலம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானி சீன் சி சாலமன் தெரிவித்துள்ளனர்.
 
இதன் மூலம், அங்கு தண்ணீர் ஐஸ் படிவங்கள் வடிவத்தில் உறைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. புதன் கிரகத்தின் துருவங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருந்தும் அங்கு தண்ணீர் ஐஸ் படிவங்களாக உறைந்து கிடப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே, இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்


Massive: An artist's impression of the planned 220-storey Sky City building planned for Changsha, south-east China. The mammoth building is planned to be built in only three months
Massive: An artist's impression of the planned 220-storey Sky City building planned for Changsha, south-east China. The mammoth building is planned to be built in only three months

                 
சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்படுகிறது. தற்போது உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சீனா சாங்ஷா நகரில் இதை விட மிக உயரமான கட்டிடத்தை கட்டுகிறது. இது 838 மீட்டர் உயரம் அதாவது 2,749 அடி உயரம் கொண்டதாக இருக்கும். 

Sky CitySky City
Ambitious: Sky City will house 17,400 people and also boast hotels, hospitals, schools and office space with occupants using 104 high-speed lifts to get around

220 அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடம் முழுவதும் ஏர்கண்டிசன் (குளு குளு வசதி) செய்யப்பட உள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்ட 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் இக்கட்டிடம் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. 

அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் கட்ட தொடங்கி மார்ச் மாதம் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 அடுக்கு மாடிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனமே இதை கட்டி தனது சாதனையை முறியடிக்கிறது. 

இதில், அதே கட்டுமான கலைஞர்களும், என்ஜினீயர்களும் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே உலகில் உள்ள மிக உயரமான 20கட்டிடங்களில் 9 கட்டிடங்கள் சீனாவில் உள்ளன.