Monday, December 3, 2012

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் மைக்ரோ சிப்


               
               The microchip-embedded badge student Andrea Hernandez would be required to wear at John Jay                    
                                        High  School in Texas or be expelled – she is fighting back

அமெரிக்காவின் சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் அடையாள அட்டையில், மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு ஜி.பி.எஸ்., தொழில் நுட்ப முறைப்படி மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
 
வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்பும், பிறகும் மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்களது வருகை பதிவேட்டில் வருகை பதிவு செய்யப்படுகிறது.
 
கடந்த 2005-ம் வருடம் கலிபோர்னியா மற்றம் ஹுஸ்டன் மாகாணங்களில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்களின் கடும் எதிர்ப்பால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் தற்போது நடைமுறை யில் உள்ளது.


                         (Reuters / Kai Pfaffenbach)                   
இந்த நடைமுறையினால் தனது தனித்தன்மை பாதிக்கப்படுகிறது என ஆன்ட்ரியா என்ற மாணவி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை கிறிஸ்தவ மதப்படி தவறானது என ஆன்ட்ரியாவின் பெற்றோரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
                  

இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம் அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, மைக்ரோ சிப் பள்ளி வளாகத்துக்குள் மட்டும்தான் வேலை செய்யும். அதற்கு மேல், மாணவர்களின் நடமாட்டத்தை அறிய வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளது.


No comments:

Post a Comment