Wednesday, July 10, 2013

பல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher

இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher. இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பல ஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல்,  IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players, Android devices, DVD, VCD, MP3, Iphone போன்ற அனைத்து மல்டிமீடியா சாதனங்களுக்கும் தரவிறக்கம் செய்யலாம். 



3GP, 3G2, AVI, XVID, MP4, MP3, MP2, WMA, WMV, GIF, FLAC, WAV, PSP, MPG, VOB, OGG, MOV, AVI. போன்ற பல formatகளை சப்போர்ட் செய்யும் வகையில் இதன் கட்டமைப்பு உள்ளது.



இந்த மென்பொருள் மூலமாக எந்த விதமான third party software இல்லாமல் DVD/VCD யாக சிடியில் பதியலாம்.


screen recorder வசதி உள்ளது. இதன் மூலம் கணினி திரையில் நமக்கு தேவையானவற்றை ரெக்கார்ட் செய்யலாம். வீடியோ சாட்டிங், சினிமா பாடல்கள், ஆன்லைன் விவாதங்கள், ஆன்லைன் நேர்முக தேர்வுகள் என எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்யலாம். 


MP3 பாடல்களை தரவிறக்கம் செய்ய தனியே ஒரு விண்டோ உள்ளது. இதில் search box இல் நமக்கு தேவையான பாடல்களின் குறிச்சொல்லை அளித்தால் அதற்கேற்ப பாடல்கள் சர்ச் ஆகும். இதில் நமக்கு தேவையான பாடல்களை மட்டும் தேர்வு செய்து தரவிறக்கம் செய்யலாம். கீழே படத்தில் ilaiyaraja songs என சர்ச் செய்துள்ளேன்.



இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யும் தளங்கள்:


இவ்வாறு இதன் வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இன்னும் நிறைய வசதிகளை அறிந்து கொள்வீர்கள். Multi language வசதி கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் பாதுகாப்பான, இலவசமானது ஆகும்.

இந்த பயன்பாட்டை தரவிறக்கம் செய்ய http://atube-catcher.dsnetwb.com/video/download.html

இந்த மென்பொருள் பெற்றுள்ள விருதுகளை பார்க்க இங்கே கிளிக்கவும்.
http://atube-catcher.dsnetwb.com/video/content/banco-datos-Awards.html


.........................

நன்றி : ரசூலிப்ணுகோய ப்ளாக்ஸ்பாட்

யாஹூ மெயில் பயனாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை


சிலர் எண்ணலாம் யாரச்சும் Yahoo இப்பொழுதும் பாவிக்கிறார்களா என? ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது 2008 தொடக்கம் இணையத்தில் இருப்பவர்களின் Default Email இப்போதும் yahoo தான். அவர்கள் மாற விரும்பினாலும் அவர்களால் முடியவில்லை. அப்படி yahoo Mail பாவிக்கும் ஒருவரா நீங்களும்? நிச்சயம் இப்பதிவு உதவும்.. இப்பதிவில் yahoo mail தொடர்பான சில சிக்கல்களையும் கட்டணம் செலுத்தாமல் Google போன்ற சேவைகளுக்கு மாறுவது பற்றியும் இரத்தின சுருக்கமாக காணுங்கள்.

அண்மையில் எனக்கும் என்  நண்பர்களுக்கும் நடந்த சம்பவங்களே இப்பதிவை எழுத வைத்தது.

நடந்தது என்ன?


 IELTS  கற்று கொண்டிருக்கும்   இவருக்கு அண்மையில் தான் பரீட்சை நடந்து முடிந்தது. இவரின்  Default Email ****@yahoo.com . இவரின் பரீட்சை திகதிகள் பற்றி மின்னஞ்சல் அனுப்ப பட்ட போது இவரால் மெயில் box இனை திறக்க முடியவில்லை. பின்பு  தான் புரிந்தது இலங்கைக்கான அவர்களின் servers செயல் இழந்து விட்டது. பின்பு ஒரு நாளின் பின்னர் தான் மீள இயங்க தொடங்கி இருக்கிறது.

இன்னொரு நண்பருக்கும் அப்படி தான்... அவரின் iPhone 5 இல் இன்று வரை yahoo  mail box இனை  configure செய்ய முடியவில்லை.

அதே போல எனக்கும் நடந்தது.. என் yahoo கணக்கு தானாகவே  நிரந்தரமாக அழிக்கப்பட்டு விட்டது. இன்றுவரை அவர்களுடன் தொடர்பு கொண்டும் அவர்கள் பதில் அளிக்கவே இல்லை. நல்ல வேளையாக அதன் inbox backup  ஒன்று இருந்ததால் அவற்றின் மூலம் பெரும்பாலான Email அனுப்புபவர்களை Gmail க்கு வரவைத்து விட்டேன்.

இவை எல்லாம் தொழில்நுட்ப பிழைகளே.. இவ்வாறு நடக்க என்ன காரணம்?? முன்பு கொடி கட்டி பறந்த Yahoo, Google இன் அபரிமிதமான வளர்ச்சியால் முடிங்கி விட்டது. என்றாலும் இயக்கிய படி தான் இருக்கிறது. இவர்களால் இவர்கள் மெயிலையே கட்டுபடுத்த முடியவில்லை. இது போதாது என்று ovi, nokia mail (இரண்டும் ஒன்று தான்) மெயில் சேவைகளையும் வாங்கி விட்டார்கள்..

Yahoo துரதிஷ்டவசமாக Email forwarding வசதியை இலவசமாக வழங்குவது இல்லை. இது கிடைத்தால் நீங்கள் Yahoo mail க்கு வரும் மின்னஞ்சல்களை இலகுவாக வேறு சேவைக்கு திருப்பி விடலாம்.

நாளை உங்களுக்கும் இப்படி மெயில் காணாமல் அல்லது திறக்க முடியாமல் போகலாம்.

 இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
முடிந்தவரை விரைவாக yahoo  இனை விட்டு வெளியேற வேண்டும்.

  1. நண்பர்களுக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை தெரிய படுத்துங்கள்.
  2. இணைய சேவைகளுக்கு இவர்களின் மின்னஞ்சலின் அடியில் இருக்கும் Update subscription link மூலம் சென்று புதிய முகவரியை பதியுங்கள்.


இதற்கும் மேலாக yahoo க்கு வரும் Mails களை திரட்ட gmx.com இல் சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் yahoo கணக்கு உயிருடன் இருக்கும் வரை அதற்கு வரும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக gmx.com இலும் சேமிக்க படும்.

இதை விட வேறு சில வழிகளும் இணையத்தில் உண்டு... 
உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு இலகுவான வழி மூலம் உங்கள் மின்னஞ்சல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்..

பொதுவாக Gmail சிறந்த ஒன்று. Hotmail இல் சில விசேட சேவைகள் கிடைக்கிறது..

.................................நன்றி :தமிழ்சிசி.காம்

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்



நம் வாழ்க்கையில் மடினிகளில்  பயன்பாடு  மிகவும் முக்கியமானதாக உள்ளது. மடினியை பயன்படுதுவது இப்போதெல்லாம் சாதாரண மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் மடினி பேட்டரியை சார்ஜ் செய்வது  மிகவும் எளிதாக நினைக்கின்றனர். மடினி பேட்டரிகள் விரைவில் தனது மின்சக்தியை இழப்பது ஏன் தெரியுமா?, அதேபோல்  மடினி முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் எடுப்பது ஏன்  தெரியுமா?. இதுபோன்ற விசயங்களால் நாம் எப்போதும் மடினியை சார்ஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும் மடினி பேட்டரியின் திறனை எவ்வாறு மேம்பாடு அடைய செய்வது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும். அதை பற்றி இந்த பதிவில் பார்போம்.


ஈரப்பதம் குறைந்த அல்லது வெப்பமிகு இடங்களில் மடினியை  சார்ஜ் செய்ய கூடாது. காரணம் சார்ஜ் செய்யும் போது உங்கள் சார்ஜரின் அடப்டர் மிக சூடாக காணப்படும். அந்த வேளையில் அதன் சுற்றுபுறமும் சூடாக இருந்தால் அதிக சூட்டால் அடப்டர் தீபற்றிக்கொள்ளும் நிலை உருவாகலாம்.
தொடர்ந்து மடினியை சார்ஜ் செய்வது சரியல்ல. உங்கள் மடினி மூழுமையாக(100%) சார்ஜ் ஆனா பின்பு மேலும் அப்படியே தொடராமல் சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும். இந்த முறை மடினியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும். சார்ஜ் மத்தியில் மடினி இருந்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம். இப்படி செய்வதால் உங்கள் மடினியின் பேட்டரி செயல்திறன் குறைய வழிவகுக்கிறது அல்லது உங்கள் மடினி பேட்டரி ஆயுள் பாதிக்கும். மேலும் பேட்டரி மின்சக்தி 15 சதவீதம் அடையும்போது மட்டுமே மீண்டும் மடினியை சார்ஜ் செய்ய வேண்டும். 

நீண்ட நாள் பயனுக்கு பின் மடினியின் பட்டரியை கடிப்பாக மாற்ற வேண்டும். இதர்க்காக எந்த ஒரு மடினி நிறுவனங்களும் கூடுதல் பட்டரியை வழங்குவதும் கிடையாது. அவ்வாறு வழங்கினால் நிறுவனத்தின் நம்பக தன்மை பாதிக்கப்படும் என்ற  காரணத்தால் வழங்கப்படுவது இல்லை. பட்டரியை மாற்றுவதற்க்கு ஏன் இந்த தகவல்கள் என்று கூட நீங்கள் எண்ணலாம். கடிப்பாக நெடிய பயன்பாட்டை அடைந்த பட்டரியை மாற்றுவதன் மூலம் நம் மடினி திடீரென உண்டாகும் மின்சக்தி வெட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மடினியை பாதுகாக்கலாம் அல்லவா. மேலும் ஒவ்வொரு பட்டரிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் உண்டு, அதற்க்கு மேல் அதை பயன்படுவது பாதுகாபிற்க்கு நல்லதல்ல.

உங்கள் மடினி தூசு உள்ள இடங்களில் வைத்து பயன்படுதுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.  இல்லையெனில் உங்கள் மடினியின் மதர்போர்ட் மற்றும் பட்டரி ஆகியவைகளின் திறன் பாதிக்கப்படும்.

மடினி பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க குறிப்புகள் சுருக்கமாக 

1) ஈரப்பதம் அல்லது வெப்பமிக இடத்தில் மடினியை சார்ஜ் செய்ய கூடாது

2) தொடர்ந்து மடினி பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்த கூடாது

3) மின்சக்தி 15 சதவீதம் அடையும் போது மட்டுமே மடினியை சார்ஜ் செய்யவேண்டும் 

4) மடினி குளுமையான சூழலில் வைத்து  தான்  பயன்படுத்த வேண்டும்

5) மடினியின் காற்று பேனல்கள் திறந்த இருக்க வேண்டும்

6) காரில் மடினியை வைப்பது பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்

7) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பழைய பேட்டரி மாற்ற வேண்டும்

8) தூசி உள்ள இடங்களில் மடினியை பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்

9) எப்போதும் காற்றோட்டம் உள்ளபடி ஏதாவது மின்விசிறிகளை மடினியின் பக்கத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

.................................
தமிழாக்கம் - ராஜு சரவணன் 

மூலம் : http://infoceanhub.com