நம் வாழ்க்கையில் மடினிகளில் பயன்பாடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மடினியை பயன்படுதுவது இப்போதெல்லாம் சாதாரண மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் மடினி பேட்டரியை சார்ஜ் செய்வது மிகவும் எளிதாக நினைக்கின்றனர். மடினி பேட்டரிகள் விரைவில் தனது மின்சக்தியை இழப்பது ஏன் தெரியுமா?, அதேபோல் மடினி முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் எடுப்பது ஏன் தெரியுமா?. இதுபோன்ற விசயங்களால் நாம் எப்போதும் மடினியை சார்ஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும் மடினி பேட்டரியின் திறனை எவ்வாறு மேம்பாடு அடைய செய்வது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும். அதை பற்றி இந்த பதிவில் பார்போம்.
ஈரப்பதம் குறைந்த அல்லது வெப்பமிகு இடங்களில் மடினியை சார்ஜ் செய்ய கூடாது. காரணம் சார்ஜ் செய்யும் போது உங்கள் சார்ஜரின் அடப்டர் மிக சூடாக காணப்படும். அந்த வேளையில் அதன் சுற்றுபுறமும் சூடாக இருந்தால் அதிக சூட்டால் அடப்டர் தீபற்றிக்கொள்ளும் நிலை உருவாகலாம்.
தொடர்ந்து மடினியை சார்ஜ் செய்வது சரியல்ல. உங்கள் மடினி மூழுமையாக(100%) சார்ஜ் ஆனா பின்பு மேலும் அப்படியே தொடராமல் சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும். இந்த முறை மடினியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும். சார்ஜ் மத்தியில் மடினி இருந்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம். இப்படி செய்வதால் உங்கள் மடினியின் பேட்டரி செயல்திறன் குறைய வழிவகுக்கிறது அல்லது உங்கள் மடினி பேட்டரி ஆயுள் பாதிக்கும். மேலும் பேட்டரி மின்சக்தி 15 சதவீதம் அடையும்போது மட்டுமே மீண்டும் மடினியை சார்ஜ் செய்ய வேண்டும்.
நீண்ட நாள் பயனுக்கு பின் மடினியின் பட்டரியை கடிப்பாக மாற்ற வேண்டும். இதர்க்காக எந்த ஒரு மடினி நிறுவனங்களும் கூடுதல் பட்டரியை வழங்குவதும் கிடையாது. அவ்வாறு வழங்கினால் நிறுவனத்தின் நம்பக தன்மை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் வழங்கப்படுவது இல்லை. பட்டரியை மாற்றுவதற்க்கு ஏன் இந்த தகவல்கள் என்று கூட நீங்கள் எண்ணலாம். கடிப்பாக நெடிய பயன்பாட்டை அடைந்த பட்டரியை மாற்றுவதன் மூலம் நம் மடினி திடீரென உண்டாகும் மின்சக்தி வெட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மடினியை பாதுகாக்கலாம் அல்லவா. மேலும் ஒவ்வொரு பட்டரிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் உண்டு, அதற்க்கு மேல் அதை பயன்படுவது பாதுகாபிற்க்கு நல்லதல்ல.
உங்கள் மடினி தூசு உள்ள இடங்களில் வைத்து பயன்படுதுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இல்லையெனில் உங்கள் மடினியின் மதர்போர்ட் மற்றும் பட்டரி ஆகியவைகளின் திறன் பாதிக்கப்படும்.
மடினி பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க குறிப்புகள் சுருக்கமாக
1) ஈரப்பதம் அல்லது வெப்பமிக இடத்தில் மடினியை சார்ஜ் செய்ய கூடாது
2) தொடர்ந்து மடினி பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்த கூடாது
3) மின்சக்தி 15 சதவீதம் அடையும் போது மட்டுமே மடினியை சார்ஜ் செய்யவேண்டும்
4) மடினி குளுமையான சூழலில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும்
5) மடினியின் காற்று பேனல்கள் திறந்த இருக்க வேண்டும்
6) காரில் மடினியை வைப்பது பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்
7) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பழைய பேட்டரி மாற்ற வேண்டும்
8) தூசி உள்ள இடங்களில் மடினியை பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்
9) எப்போதும் காற்றோட்டம் உள்ளபடி ஏதாவது மின்விசிறிகளை மடினியின் பக்கத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
.................................
தமிழாக்கம் - ராஜு சரவணன்
மூலம் : http://infoceanhub.com
No comments:
Post a Comment