மதிய வேளைகளில் சாப்பிடும் சாப்பாட்டிற்கு சைடு-டிஸ் ஆக நிறைய மசாலாவை வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேசரியில் நெய்யால் வறுத்து போடப்படும் முந்திரிப் பருப்பில் மசாலாவை செய்து சாப்பிட்டிருப்போமா? ஆனால் அவற்றில் செய்யப்படும் மசாலாவின் சுவையே தனி தான். அப்படிப்பட்ட அந்த சுவையான மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
முந்திரிப்பருப்பு - 100 கிராம்
பால் கோவா - 1 டேபிள் ஸ்பூன் (இனிப்பு சேர்க்காதது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 1
தக்காளி - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பால் கோவா - 1 டேபிள் ஸ்பூன் (இனிப்பு சேர்க்காதது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 1
தக்காளி - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்கு :
வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (சிறியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
ஏலக்காய் - 1
மல்லி விதை - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5-6
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (சிறியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
ஏலக்காய் - 1
மல்லி விதை - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5-6
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் நறுக்கிய தக்காளியை அரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு நறுக்கிய பாதி வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது கொத்தமல்லி, ஏலக்காய், மல்லி விதை, சோம்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, சீரகம் போட்டு நன்கு வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நெய்யும், அந்த தக்காளி கலவையும் தனித்தனியாக பிரியும் வரை வதக்கவும்.
பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் உற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு அதில் பால் கோவா, சீஸ், முந்திரிப் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயை கம்மியாக வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதனை இறக்கி வைத்து, அதன் மேல் மீதமுள்ள கொத்தமல்லி இலையை தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
இப்போது சுவையான முந்திரிப்பருப்பு மசாலா ரெடி!!!
No comments:
Post a Comment