உருளைக்கிழங்கு கீரை கறி உடலுக்கு மிகவும் சிறந்த சத்துக்கள் நிறைந்துள்ள ஒரு கறி. இதில் இருக்கும் உருளைக்கிழங்கு உடலுக்கு வாயுத் தொல்லை தரும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அதனை சரிசெய்ய பெருங்காயத்தூளை சேர்ப்பதால், உடலில் வாயு சேராமல் இருக்கும். மேலும் அது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறும் இருக்கும். இத்தகைய உருளைக்கிழங்கு கீரை கறியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
அரை கீரை (அ) சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்தது)
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்தது)
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கீரையை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். பின் அதனை வெளியே எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கியதும், நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.
உருளைக்கிழங்கில் மசாலா அனைத்தும் சேர்ந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள கீரையை போட்டு, உப்பை சரிபார்த்து (வேண்டுமென்றால் தண்ணீர் விட்டு), ஒரு முறை கொதித்ததும் இறக்கிவிடவும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு கீரை கறி தயார்!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
English summary
Make delicious potato greens curry using this simple recipe from awesome cuisine.
No comments:
Post a Comment