Tuesday, September 18, 2012

பட்டர் ஃபிஷ் ஃப்ரை!!!

                                Butter Fish Fry


பட்டர் ஃபிஷ் ஃப்ரை ஒரு பெங்காளி ரெசிபி. இதை செய்வது என்பது மிகவும் ஈஸியானது. வாரத்திற்கு 2-3 முறை மீன் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிடும் போது சற்று வித்தியாசமாக பெங்காளியில் சிறந்து விளங்கும் ஒரு ரெசிபியான பட்டர் ஃபிஷ் ஃப்ரை செய்து சாப்பிடலாம். இந்த பட்டர் ஃபிஷ் ஃப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முள்ளில்லாத மீன் - 10
முந்திரி பருப்பு - 1/4 கப்
பாதாம் பருப்பு - 1/4 கப்
கார்ன் ஃப்ளார் - 1-2 கப்
முட்டை - 2
பால் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாதாம், முந்திரி ஆகியவற்றை நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் பாதாம் பேஸ்ட், முந்திரி பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் அதில் மீனை நன்கு கழுவி அதில் போட்டு, மீனில் அந்த கலவையானது நன்கு பிடிக்குமாறு பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
நன்கு ஊறியவுடன் அதில் கார்ன் ஃப்ளார், முட்டை, பால், மிளகுத்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு காய வைத்து, அதில் பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான பட்டர் ஃபிஷ் ஃப்ரை ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
English summary
Butter fish fry is a very popular Bengali recipe. It is a very simple fish recipe where some fish fillets are marinated and then fried in a batter. This butter fish recipe is generally eaten as a complement to the main course dish. You can even make a gravy preparation with this fish fry recipe.



No comments:

Post a Comment