Monday, December 31, 2012

காதல் - அது எப்படிப்பட்டது...


                 

காதல் மிகவும் மென்மையானது இரு மனங்கள் மட்டுமே 
புரிந்துக் கொள்ளக்கூடிய ரகசிய வார்த்தைகளின் தொகுப்பு, அன்பு தீபங்களின் 
ஒளி வெள்ளத்தில் மூழ்கும் இரு உள்ளங்களின் துடிப்பை விவரிக்க எத்தனை 
கவிஞர்கள் வந்தாலும் ஈடாகாது.



விழி பேச, இதயம் கேட்க அப்பப்பா.... அந்ந ஓசையின் தாக்கம் அந்தக் 
காதலர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு மனித்துளியும் ஆனந்த ரீங்காரமிட்டுக் 
கொண்டேயிருக்கும்.

மனதில் காதல் அரும்பிய அந்த நாட்களில் உலகமே பூப்பூக்கிறது. ஒவ்வொரு நாள் 
விடியலிலும் அவளின் முகம் நூறு சூரியன்களை ஒத்திருப்பதை போலதொர உணர்வு. 
அவளின் கடைக்கன் பார்வையில், இவன் உள்ளம் வானத்தை முட்டி, அதையும் தாண்டி 
மேலே பறக்கத் தொடங்கியிருக்கும்.


                   

முதன்முதலாக அருகருகே நடக்கத் தொடங்கும்போது சிறு அச்ச உணர்வுடன் 
தொடர்வது இனிமையிலும் இனிமை. வர்ணனையைத் தாண்டிய மெல்லிய உணர்வு அது.


இனி வரும் இரவுகளிலெல்லாம் அவள் மட்டும்தான் துணை. தூக்கத்தை மறந்து, அவள் 
நினைவுகளில் மூழ்கிய இரவுகள் தீயிலிட்டதைப்போன்று மிகவும் வெப்பமானது.

தனக்கெனவே துடிக்கும் இதயம் ;
தன் வெளிக்காற்றை உள்காற்றாக ஏற்கும் நுரையீரல்.

                   


இப்படி உலகமே அவளாக அவள் மட்டுமாக காட்சியளிக்கத் தொடங்குகிறது. 
உயிர்த்துடிப்பின் ஜீவ ஆதாரமான அவளுடனான வாழ்க்கையை காதல் அவனுக்குள் 
அவனையறியாமலேயே புகுத்தி விடுகின்றது. இனி அவளைப் பிரிப்பதும் அவனைக் 
கொல்வதும் ஒன்றாகி விடுகின்றது.

மெல்லத்தொடரும் இந்த நாட்கள் மகிழ்ச்சி ஆரவாரமிக்க நாட்களாகி விடுகின்றது.

முதல் ஸ்பரிசம் பேரானந்தத்திற்கு வழி கோலுகிறது. அவளைப்பற்றியதான எண்ணங்கள் 
மேலும் தீவிரமடைகின்றன. இருவருக்குமிடையேயான உறவு வலுப்பெறத் தொடங்குகிறது. 
தலைவனும், 
தலைவியும் உலகைப் புதிதாக காணத் தொடங்குகிறார்கள். எங்கும் ஆனந்த 
பூக்கோலம், மகிழ்ச்சி வெள்ளம், சுற்றியும ஆயிரம் பேர் இருந்தாலும் 
இவர்கள் இருவர் மட்டும் தனித்தே இருப்பதாக ஒரு உணர்வு கற்பனையில் 
கண்ட காட்சிகளை நிஜத்திலும் கண்டிட துடிக்கும் இரு இதயங்களின் ஓசை, 
அவர்கள் மட்டுமே அறிக்கூடியது. வார்த்தைகளால் விவரிக்க இயலாதது 
ஆதலின் வாழ்க்கையை ஆனந்தப் பூங்காவாக்கீட அனைவரும் காதல் செய்வீர்!

--------------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்

1 comment: