ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர்வதி என்ற பகுதியில் 18 வயதுக்கும் கீழ் உள்ள பெண் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கிராம் பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ள பயன்படும் செல்போன்கள் பல வகையில் ஆபத்தினை விளைவிப்பதாக உள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதய்பூர் என்ற பகுதியில் 18 வயதுக்கும் கீழ் உள்ள பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என்று கிராம பஜ்சாயத்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பல கிராம பகுதிகளில் பெண் குழந்தைகள், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் தொழில் நுட்ப சாதனங்கள் பயன்படுத்துவதால், தகாத மனிதர்களுடன் சகவாசம் கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் பெண் குழந்தைகளின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு, பதினெட்டு வயதுக்கும் கீழ் இருக்கும் பெண் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த கிஷோர்புரா என்ற கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment