Wednesday, September 12, 2012

தரவரிசையில் கூகுளை பின்னுக்கு தள்ளிய ஃபேஸ்புக்!


Facebook Beats Google in Alexa's Rank Report சர்வதேச அளவில் வலைத்தளங்களின் தரவரிசைப்பட்டியலை வழங்கி வரும் அலெக்ஸா நிறுவனத்தின் பட்டியலில், கூகுளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.
கம்ப்யூட்டர் யுகத்தின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தான் தரவரிசை பட்டிலில் முதல் இடத்தில் இருந்து வந்தது. முதன் முறை கூகுளை பின்னுக்கு தள்ளிவிட்டு, தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் கொடி நாட்டி இருக்கிறது ஃபேஸ்புக்.
இது திகைக்க வைக்கும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு தகவலை தேட வேண்டும் என்றாலும், கூகுளை திறக்காமல் சாத்தியம் இல்லை என்று ஒரு நிலை இருப்பதனால் கூகுள் தரவரிசை பட்டியலில் முதலில் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
ஆனால் சில காலங்களாக அனைவரின் மனதையும் இரவு பகலாக ஆக்கிரமித்து வரும் ஃபேஸ்புக் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கூகுளை இரண்டாம் இடத்தில் தூக்கி வைத்துவிட்டு, முதலிடத்தை பிடித்திருக்கும் ஃபேஸ்புக் அனைவரின் கண்களையும் சில நிமிடங்கள் அகலமாக விரிய வைக்கிறது.
லட்சோப லட்சம் மக்களால் தினம் தினம் ஆயிரக்கணக்கான் வலைத்தங்கள் இன்டர்நெட்டில் தேடப்பட்டு வருகிறது. இவற்றில் எந்த வலைத்தளம் அதிகமான பேரால் தேடப்படுகிறது என்பது பற்றிய தரவரிசை பட்டியலை பிரித்து காட்டும் நிறுவனம் அலெக்ஸா.
இந்த அலெக்ஸா டூல்பாரை ஒருமுறை உங்களது சிஸ்டத்தில் பயன்படுத்திவிட்டால் போதும், அதன் பிறகு எந்த வலைத்தளத்தை திறந்தாலும், அதன் தரவரிசை பட்டியல் தெளிவாக காட்டப்படும்.
இதில் முதல் 10 இடத்தில் இருக்கும் வலைத்தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம். முதலிடத்தில் ஃபேஸ்புக், இரண்டாவது இடத்தில் கூகுள், மூன்றாவது இடத்தில் யூடியூப், நான்காவது யாஹூ மற்றும் ஐந்தாவது இடத்தில் பெய்டூ.காம்
இதை தொடர்ந்து ஆறாவது இடத்தில் விக்கிப்பீடியா, ஏழாமிடத்தில் விண்டோஸ் லைவ் இருக்கிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர் எட்டாமிடத்தில் உள்ளது. கியூகியூ.காம் ஒன்பதாம் இடத்திலும் மற்றும் அமேசான்.காம் பத்தாமிடத்திலும் உள்ளன. 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments:

Post a Comment