சிலிக்கான் பாலிமர் மற்றம் எலியின் இதய திசுக்கள், இந்த இரண்டையும் வைத்து புதிய ஜெல்லி ஃபிஷ் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இந்த ஜெல்லி ஃபிஷ் ரோபோட் மீன், மனித இதயத்தில் ஏற்படும் கோளாறுகள் பற்றிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதற்காகவே பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலிக்கான் மற்றும் எலியின் தசை மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஜெல்லி மீனுக்கு மெடுசாய்டு என்று பெயரிடப்பட்டுள்ளனர். மனிதனின் இதயம் போலவே இந்த ஜெல்லி மீன் பம்ப் செய்யப்படும் வசதிகளுடன்
உருவாக்கப்ப்டடுள்ளது.
உருவாக்கப்ப்டடுள்ளது.
இதன் மூலம் மனித இதயத்தில் ஏற்படும் கோளாறு சம்மந்தமான ஆராய்ச்சிக்கு பயன்படுவது மட்டும் அன்றி, இதய உடலியல் பற்றிய நுனுக்கங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளவும் பயன்படும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பையோஎன்ஜினீயர் கெவின் கிட் பார்க்கர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதய கோளாறுகளை கண்டுபிடிக்க பயன்படும் இந்த ஜெல்லி ஃபிஷிற்கு அசைவுகளை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது. இதற்காக இதில் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி ஃபிஷ் மின்சாரம் நிறைந்த ஒரு தொட்டியில் நீந்தவும் செய்கிறது. இந்த அசைவுகள் சிலிக்கான் மூலம் வழங்கப்படுகிறது.
பொதுவாக நுன்னிய சிலிக்கான்கள் அதிகமான மின்சாரத்தினையும் ஈர்க்கும் வலிமை கொண்டது. அப்படி அதிகப்படியாக ஈர்க்கும் மின்சாரத்தினை தேவையான அளவு அந்த சாதனத்திற்கு கொடுக்கும் சக்தியும் இந்த சிலிக்கானுக்கு உள்ளது.
இப்படி தொழில் நுட்ப ரீதியான சில விஷயங்களையும் இந்த ஜெல்லி ஃபிஷ் கொண்டிருக்கிறது. செயற்கை இதயத்தினை வடிவமைக்கவும் மற்றும் கார்டியோவேஸ்குலர் சம்மந்தமான மருந்து உருவாக்கத்திற்கும் இந்த மெடுசாய்டு ஜெல்லி மீனை பயன்படுத்தலாம் என்றும் கெவின் கிட் பார்க்கர் கூறியுள்ளார்.
சில காலங்களுக்கு முன்பு மனிதனின் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது தீர்க்க முடியாத ஒரு வியாதியாக இருந்தது. ஆனால் இன்று இதய மாற்று ஆறுவை சிகிச்சை மட்டும் அல்லாது, இதயம சம்மந்தமாக எந்த கோளாறுகள் வந்தாலும் அதை தீர்க்கும் மருந்து தொழில் நுட்பத்தின் மூலமாகவும் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று தான் இந்த மெடுசாய்டு ஜெல்லி ஃபிஷ். தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் உடலில் ஏற்படும் நோயினை தீர்க்கவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment