Wednesday, September 12, 2012

மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் புதிய ரோபோ


Now a Robot Can Understand Emotions
பின்லாந்து நாட்டில் உள்ள யுனிவெர்சிட்டி ஆப் அவ்லு என்ற பல்கலைக்கழகம் ஒரு புதிய ரோபோவை உருவாக்கியிருக்கிறது. இந்த ரோபோவின் மிக முக்கிய விஷேசம் என்னவென்றால் இது மனிதர்களின் உணர்வுகள், பேச்சுக்கள் மற்றும் உடல் செய்கைகளை மிக எளிதாக புரிந்து கொள்ளும்.
இந்த ரோபோவை நர்சிங் ஹோம், பாதுகாப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் பயன்படுத்தலாம் என்று அவ்லு யுனிவெர்சிட்டி கூறியிருக்கிறது. மேட்டி பியடிகைனின் மற்றும் ஜவா ரோனிங் ஆகியோரின் தலைமையில் அமைந்த குழு இந்த ரோபோவில் உள்ள ஸ்பீச் அனிமேஷன் மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றில் மெசின் விஷன்
என்ற ஒரு புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய மெசின் விஷன் தொழில் நுட்பத்தை உருவாக்க இந்த குழு சாதாரண வீடியோ கேமரா மற்றும் கினக்ட் டெப்த் கேமராவைப் பயன்படுத்தி இருக்கிறது. இந்த ரோபோவில் உள்ள மைக்ரோபோன்கள் திசைகள் மற்றும் பேசும் ஒலி அளவையும் அறிந்து கொள்ளும்.
இதில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு சென்சார்கள் வழியாக சாதாரண தகவல்கள், நேரம் பற்றிய தகவல்கள் மற்றும் உணர்வுகளின் நிலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளும். இவற்றை மெசின் விஷன் மொழி மாற்றம் செய்யும்.
அதற்கேற்ப ரோபோ  மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும். இந்த ரோபோ வெற்றி பெற்றால் மிக விரைவில் ரோபோக்களும் மனித வாழ்வில் மிக முக்கியமான அங்கமாகிவிடும்
என்று நம்பலாம்.

No comments:

Post a Comment