உடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
90 நிமிடங்கள் திகில் படங்கள் பார்த்தால் 113 கலோரி காலியாகிறதாம். 1980ம் ஆண்டு வெளியான ‘தி சைனிங்' என்ற திரைப்படத்தைப் பார்த்தால் 184 கலோரிகள் காலியாகிவிடுமாம். ‘ஜாஸ்' படத்தை பார்த்தவர்களுக்கு 158 கலோரிகள் காலியானதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 10 திகில்படங்களை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் போன்றவைகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. திரில்லர் படங்களைப் பார்க்கும் போது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் அவர்களின் கலோரி எரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. திகில் படங்களினால் மனிதர்களின் நாடித்துடிப்பு அதிகரிக்கிறது இதயத்துடிப்பை எகிறுகிறது என்கிறார் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் மெக்கன்சி. இதனால் ரத்த ஓட்டம் உடலில் வேகமாக செலுத்தப்படுகிறது. தேவையற்ற கலோரிகள் காலியகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
திகில் படம் பார்ப்பவர்கள் சீட்டு நுனிக்கு வந்து விடுவார்கள். தலைமுடி கூட சிலருக்கு குத்திட்டு நிற்கும். தலையணையை அழுத்தமாக பிடித்துக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் உடலில் தேவையற்ற கலோரிகளை காலி செய்கின்றனவாம்.
No comments:
Post a Comment