Wednesday, September 12, 2012

சீனாவில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் மாணவர்கள்


Foxconn Factory
சீனாவில் உள்ள ஜூயாங்சு ப்ராவின்ஸில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சியைப் பெறுவதற்காக பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதாக ஷாங்காய் டெய்லி ரிப்போர்ட்ஸ் தெரிவித்திருக்கிறது.
வரும் செப்டம்பரில் ஆப்பிள் தனது ஐபோனைக் களமிறக்க இருக்கிறது. இந்த ஐபோனை பாக்ஸ்கான் உதவியோடு ஆப்பிள் உருவாக்குகிறது. இந்த நிலையில் பாக்ஸ்கானுக்கு 10,000 அளவிற்கு வேலையாள்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இதைச் சரிக்கட்ட ஜூயாங்கு பகுதியில் இருக்கும் மாணவர்களை அரசே வலுக்கட்டாயமாக பாக்ஸ்கானில் வேலை செய்யப் பணிப்பதாக அந்த தகவல் கூறுகிறது.
இதற்காக மாணவர்களுடனும் மற்றும் அவர்களின் கல்வி நிறுவனங்களிடமும் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை. அதோடு அவர்களில் பெற்றோர்களிடமும் தகவல் தெரிக்கவில்லை. மேலும் இந்த மாணவர்கள் பாக்ஸ்கானில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாணவர்கள் பாக்ஸ்கானில் வாரத்திற்கு 6 நாள்கள் வேலை செய்ய வேண்டும். மேலும் தினமும் 12 மணி நேரம் அவர்கள் வேலை செய்ய வேண்டும். அதற்காக அவர்களுக்கு மாதம் 1,550 யுவன் அதாவது 244 அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகின்றன. ஆனால் மாணவர்கள் தங்கள் உணவு மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றை தங்கள் செலவில் கவனித்துக் கொள்ள வேண்டும்.
பாக்ஸ்கானுக்கு இதுவெல்லாம் புதியது ஒன்றும் அல்ல. ஏற்கனவே அந்நிறுவனத்தின் வேலைச் சூழல் தரமாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்திருக்கிறது. இந்த நிலையில் வரும் 2014க்குள் 1 மில்லியன் ரோபோக்களை பாக்ஸ்கான் வாங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மனிதர்களுக்குப் பதிலாக இந்த ரோபோக்கள் வேலை செய்யும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments:

Post a Comment