ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் ரோபோட்டிக் தொழில் நுட்பத்தில் அமைந்த ஒரு புதிய இயந்திரத்தை விற்பனைக்காக சந்தையில் களமிறக்க இருக்கிறது. இந்த ரோபோ இயந்திரத்திற்கு மிமோ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த ரோபோ எந்திரம் பார்ப்பதற்கு ஐரோபோட் கார்ப்பின் ரூம்பா வாக்கும் க்ளீனரைப் போலத் தோன்றுகிறது. இந்த ரோபோ தொடர்ந்து பூங்காக்களிலுள்ள புற்களை அழகாக வெட்டி அழகுபடுத்தும் சக்தி கொண்டது.
இந்த ரோபோ எந்திரம் முதலில் ஐரோப்பாவில் களமிறக்கப்பட இருக்கிறது. இதன் விலை 2,100 ஈரோ முதல் 2,500 ஈரோ வரை இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அடுத்த வருடம் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த ரோபோ எந்திரம். வருடத்திற்கு 4000 ரோபோ எந்திரங்களை விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது.
ஹோண்டாவின் முந்தைய பேசும் மற்றும் நடக்கும் ரோபோட்டுகளான ஆசிமோவை ஒரு சாதாரண விளையாட்டுப் பொம்மை என்று பலர் விமர்சித்தனர். அவர்களின் கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்திருக்கும் இந்த புதிய ரோபோ உண்மையாகவே ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படும் என்று நம்பலாம்.
No comments:
Post a Comment