பல அல்ட்ராபுக்குகள் தற்போது விண்டோஸ் 7 இயங்கு தளத்துடன் வருகின்றன. அவை விண்டோஸ் 8 ஓஎஸ் களமிறங்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அடுத்ததாக இப்போது இன்டலின் அடுத்த சிப்பான ஹாஸ்வெல் தற்போது தலைப்பு செய்திகளில் அடிபடுகிறது.
அதாவது இன்டலின் அடுத்த சிப்பான ஹாஸ்வெல் விரைவில் அல்ட்ராபுக்குகளில் வரவிருக்கிறது. ஆனால் இந்த புதிய சிப்பைப் பற்றி இன்டல் பெரிதாக பேசவில்லை. இந்த ஹாஸ்வெல் சிப், முதல் மெயின்ஸ்ட்ரீம் பிசி க்ளாஸ் சிப்பாக இருக்கும் என்று தெரிகிறது. அதோடு இதில் க்ராபிக்ஸ் வசதிகளும் மிக சூப்பராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஹாஸ்வெல் சிப் வரும் வரையிலும் ஏசர் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்கள் தங்களது அல்ட்ராபுக்குகளில் விண்டோஸ் 8 இயங்கு தளம் மற்றும் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைப் பயன்படுத்தும். வரும் 2013ல் இந்த புதிய சிப் களம் இறங்க இருக்கிறது. அதற்கு பின் இந்த புதிய சிப் தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கும் என்று தெரிகிறது.
the next chapter in the ultrabook saga haswell
No comments:
Post a Comment