பாகிஸ்தான் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய மாணவி மலாலா தாலிபன்களால் சுடப்பட்டார். தலை மற்றும் முகத்தில் குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்த 14 வயது மாணவியான மலாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல் நிலை மோசமடைந்ததை அறிந்த இங்கிலாந்து அரசு, கடந்த மாதம் 15ம் தேதி அவரை லண்டனுக்கு கொண்டுவந்து, சிகிச்சை அளித்து வருகின்றது. தற்போது உடல்நிலை தேறிவரும் மலாலாவுக்கு இங்கிலாந்து அரசு வீரதீர செயலுக்கான உயர் விருதை வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள உலக அமைதி மற்றும் அபிவிருத்தி அமைப்பு வழங்கிய இந்த விருது, பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரபுக்கள் சபை வளாகத்தில், நேற்றிரவு பாகிஸ்தான் துணை உயர் தூதரிடம் வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் துணை உயர் தூதர் சுல்பிகர் கர்தேதி கூறியதாவது:
'இந்த விருதை மலாலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இங்கு வர முடியாததால் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இதை மலாலாவிடம் ஒப்படைப்பேன்' இவ்வாறு அவர் கூறினார்.
லண்டன் பிஷப் ரிச்சர் சார்ட்டர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர் வாஜித் சம்சுல்ஹசன், துருக்கி கல்வியாளர் நெவ்சத் யால் கிண்டாஸ், ஐரோப்பிய செஸ் வீரரான 8 வயது சிறுவன் ஜோஸ் அலிட்மென் ஆகியோருக்கும் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டன.
::::::::::::::::::::::மாலைமலர்::::::::::::::::::::::::
.
.
No comments:
Post a Comment