இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை அமலில் உள்ளது. இந்த நிலையில், மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் வரைவு தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கமிட்டிதான், சமூக மற்றும் மனிதாபிமான விவகாரங்களை கவனித்து வருகிறது. அந்த தீர்மானத்தில், மரண தண்டனை இன்னும் நீடித்து வருவது ஆழ்ந்த கவலைக்குரியது.
எனவே, அனைத்து நாடுகளும் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கத்தில், மரண தண்டனையை கைவிட வேண்டும். மரண தண்டனையை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது. மரண தண்டனை விதிப்பதற்கான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
யாரையும் கட்டுப்படுத்தாத இந்த வரைவு தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது.
அதில், தீர்மானத்தை எதிர்த்து இந்தியா ஓட்டு போட்டது. அதுகுறித்து இந்தியா விளக்கம் அளிக்கையில், ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் சட்ட நடைமுறையை தீர்மானிக்க இறையாண்மை உரிமை உள்ளது. இந்த தீர்மானம், மரண தண்டனையை கைவிட வற்புறுத்துகிறது. தீர்மானத்தை அதன் தற்போதைய வடிவத்தில் ஏற்க முடியாது என்று கூறியது.
இருப்பினும், 110 நாடுகளின் ஆதரவுடன் இந்த வரைவு தீர்மானம் நிறைவேறியது. 36 நாடுகள், ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா உள்பட 39 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டு போட்டன. அவற்றில், அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், வங்காள தேசம், ஈரான், ஈராக், குவைத், லிபியா, கொரியா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.
:::::::::::மாலைமலர்::::::::::::::::::::
No comments:
Post a Comment