காஸா நகரம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று (20.11.2012) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 'காஸா மீதான தாக்குதலை நிறுத்து' என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மாணவர் யூனியன் தலைவர் சந்தீப் சிங் கூறியதாவது:
பல தலைமுறைகளாக பாலஸ்தீன மண்ணை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அங்கு இன அழிப்பு வேலை நடந்து வருகிறது. தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல், நடைபெற்ற அமெரிக்க தேர்தல் வெற்றியையும், நடக்க இருக்கும் இஸ்ரேல் தேர்தலையும் கருதியே நடத்தப்படுகின்றது.
இந்த தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். அதற்காக தான் இங்கே கூடியுள்ளோம். இந்த விஷயத்தில் இந்தியா மவுனமாக இருப்பதையும் நாங்கள் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும், வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
http://www.nakkheeran.in
No comments:
Post a Comment